உல்லன் நூல் செல்போன் கவர்


உல்லன் நூல் செல்போன் கவர்
x
தினத்தந்தி 11 Dec 2022 1:30 AM GMT (Updated: 11 Dec 2022 1:30 AM GMT)

செல்போன் கவரின் நீளத்திற்கு ஏற்ப உல்லன் நூலை ஐஸ்கிரீம் குச்சியில் சுற்றிக் கொள்ளுங்கள். அதை படத்தில் காட்டியபடி செல்போன் கவரின் மேல் க்ளூ கன் கொண்டு ஒட்டுங்கள்.

தேவையான பொருட்கள்:

செல்போன் கவர், உல்லன் நூல் (விருப்பமான நிறம்), ஐஸ்கிரீம் குச்சி, கத்திரிக்கோல், க்ளூ கன், பொம்மைக் கண்

செய்முறை:

செல்போன் கவரின் நீளத்திற்கு ஏற்ப உல்லன் நூலை ஐஸ்கிரீம் குச்சியில் சுற்றிக் கொள்ளுங்கள். அதை படத்தில் காட்டியபடி செல்போன் கவரின் மேல் க்ளூ கன் கொண்டு ஒட்டுங்கள். பசை உலர்ந்து நூல் நன்றாக ஒட்டிக்கொண்டதும், ஐஸ்கிரீம் குச்சியை உருவி எடுத்துவிடுங்கள். இவ்வாறு வரிசையாக, போன் கவர் முழுவதும் நிறையும் வரை ஒட்டுங்கள். பின்னர் செல்போன் கவரை 2 மணி நேரம் நன்றாகக் காயவிடுங்கள். பின்பு படத்தில் காட்டியபடி உல்லன் நூலை 'ட்ரிம்' செய்யுங்கள். பிறகு அதில் பொம்மைகளுக்கு வைக்கும் கண்களை வைத்து ஒட்டுங்கள். இப்போது அழகான செல்போன் கவர் ரெடி.

கடல் சிப்பி கண்ணாடி பிரேம்

தேவையான பொருட்கள்:

முகம் பார்க்கும் கண்ணாடி, விதவிதமான கிளிஞ்சல்கள் மற்றும் சிப்பிகள், க்ளூ கன்

செய்முறை:

கண்ணாடியின் பிரேமை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். அதன் மேல் கிளிஞ்சல்களையும், சிப்பிகளையும், சிறியதும் பெரியதுமாக இடைவெளி இல்லாமல் ஒட்டுங்கள். முழுவதும் ஒட்டி முடித்ததும், சிப்பிகள் மேல் ஒட்டியிருக்கும் அதிகப்படியான பசையை பிரஷ் கொண்டு மெதுவாக துடைத்து எடுங்கள். கண்ணாடியை ஒரு நாள் முழுவதும் அப்படியே உலரவிடுங்கள்.


Next Story