தினசரி வருமானம் தரும் அசோலா வளர்ப்பு


தினசரி வருமானம் தரும் அசோலா வளர்ப்பு
x
தினத்தந்தி 6 Nov 2022 7:00 AM IST (Updated: 6 Nov 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

‘பெரணி’ என்று அழைக்கப்படும் ‘அசோலா’ தண்ணீரின் மேற்பரப்பில் வளரக்கூடிய ஒரு நீர்வாழ் உயிரி உரம்.

குறைந்த வருமானத்தில் அதிக லாபம் தரக்கூடிய தொழில்களில் ஒன்று 'அசோலா வளர்ப்பு'. இதைப் பெண்கள் வீட்டில் இருந்தே சிறிய இடத்தில், குறைவான முதலீட்டில், பகுதி நேரமாகச் செய்து தினசரி வருமானம் பெறலாம்.

'பெரணி' என்று அழைக்கப்படும் 'அசோலா' தண்ணீரின் மேற்பரப்பில் வளரக்கூடிய ஒரு நீர்வாழ் உயிரி உரம்.

இதைக் கால்நடைகள், மீன், பன்றி மற்றும் கோழிக்கு தீவனமாகவும் பயன்படுத்தலாம். இதில் தழைச்சத்து, வைட்டமின் ஏ, பி, பி12 (பீட்டா கரோட்டின்), புரதச்சத்து, அமினோ அமிலங்கள் ஆகிய சத்துக்கள் உள்ளன. சீனா, வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் 'அசோலா வளர்ப்பு' பிரபலமாக உள்ளது.

வளர்ப்பு முறை:

வீட்டின் மேல்தளம், சிறிய அறை அல்லது நிழலான பகுதியில் குறைந்த சூரிய ஒளியில் 'அசோலா' வளர்க்கலாம். அதிகப்படியான வெப்பம் இதன் வளர்ச்சியைப் பாதிக்கும்.

2x2 மீட்டர் நீள அகலத்தில் தொட்டி அமைத்து, அதன் கீழ்ப் பகுதியில் உர சாக்கினைப் பரப்பவும். அதற்கு மேல் சில்பாசியை ஒரே சீராகப் போட்டு, பின்னர் 15 கிலோ செம்மண்ணைப் பரப்பவும்.

2 கிலோ சாணம் மற்றும் 30 கிராம் சூப்பர் பாஸ்பேட்டை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து, அமைத்

திருக்கும் தொட்டியில் 10 சென்டி மீட்டர் உயரத்துக்கு ஊற்றவும். இந்த அளவு தொட்டிக்கு 1 கிலோ அசோலா விதையைத் தூவி, லேசாகத் தண்ணீர் தெளித்தால், ஒரு வாரத்தில் வளர்ந்துவிடும். இதில் இருந்து தினமும் அரைக் கிலோ அசோலாவை அறுவடை செய்யலாம்.

5 நாட்களுக்கு ஒரு முறை ஒரு கிலோ 20 கிராம் சூப்பர் பாஸ்பேட் கலவையைத் தொட்டியில் இட வேண்டும். மெக்னீசியம், இரும்பு, தாமிரம், சல்பர் கலந்த நுண்ணூட்டக் கலவையை வாரம் ஒரு முறை இடலாம். 10 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரையும், மாதம் ஒரு முறை புதிய மண்ணையும், ஆறு மாதத்துக்கு ஒரு முறை அனைத்து இடு பொருட்களையும் மாற்ற வேண்டும்.

தொட்டியில் உள்ள நீரின் வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸ் அளவுக்குக் கீழே இருக்க வேண்டும். அறுவடைக்குப் பின் அசோலாவை சுத்தமான தண்ணீரில் அலசினால் சாணத்தின் வாசம் நீங்கும்.


Next Story