மேக்கப் இல்லாமல் அழகாக இருப்பது எப்படி?


மேக்கப் இல்லாமல் அழகாக இருப்பது எப்படி?
x

ஓட்டப் பயிற்சி, யோகா, நீச்சல் போன்ற ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள். உடற்பயிற்சி சருமத்திற்கு நன்மை செய்வதோடு, உங்கள் மனநிலையை மேம்படுத்தும். வாரம் 3 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம்.

ணிக்கணக்கில் கண்ணாடி முன் நின்று ஒப்பனை செய்து கொள்ளும் முகங்களை விட, இயல்பான அழகோடு இருக்கும் முகங்கள் பல நேரங்களில் மிக அழகானதாகத் தெரியும். இயற்கையான அழகை மேம்படுத்துவதற்கு சில எளிய வழிகளை கடைப்பிடித்தால் போதும். அதற்கு இந்த வழிமுறைகளைப் பின்பற்றிப் பாருங்கள்...

நல்ல உணவுப் பழக்கம்:

தினசரி உணவில் பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்த்துக் கொள்ளுங்கள். ஆளி விதை, அக்ரூட் பருப்பு போன்ற ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் மற்றும் ஆரஞ்சு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பூசணி போன்ற வைட்டமின்கள் நிறைந்த உணவுகள் அவசியம். முட்டை, கோழிக்கறி, கிட்னி பீன்ஸ், பருப்பு, கொண்டைக்கடலை மற்றும் பாலாடைக்கட்டி போன்ற புரதச்சத்து அதிகம் உள்ள உணவுகளையும் சேர்த்துக் கொள்ளுங்கள்.

குறைந்தபட்சம் எட்டு டம்ளர் தண்ணீர் குடிப்பது, உடலில் இருந்து நச்சுப் பொருட்களை வெளியேற்ற உதவும்.

நிம்மதியான தூக்கம்:

இரவில் நல்ல தூக்கம் முக்கியமானது. தூங்கும்போது தோல் புதிய கொலாஜனை உற்பத்தி செய்கிறது. உங்கள் செல்போனை சார்ஜ் செய்வது போல், உடல் தானாகவே சார்ஜ் செய்ய வேண்டும். இதற்கு நல்ல உறக்கம் அவசியம். இதன் மூலம் கண்களுக்குக் கீழே உள்ள கருவளையங்கள் மறையும்.

பயன்படுத்தும் பொருட்கள்:

நீங்கள் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்களில் 60 சதவீதத்தை உங்கள் சருமம் உறிஞ்சிக் கொள்கிறது. எனவே சருமப் பராமரிப்பு, முடிப் பராமரிப்புக்குப் பயன்படுத்தும் அழகு சாதனப் பொருட்கள், இயற்கையான மூலப் பொருட்களைக் கொண்டவையாக இருப்பது நல்லது. சருமத்தில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய அல்லது தலைமுடியை உலர வைக்கும் பாரபென்கள், பெட்ரோகெமிக்கல்கள் மற்றும் சல்பேட்டுகள் உள்ள பொருட்களில் இருந்து விலகி இருங்கள். இயற்கை பொருட்களைக் கொண்ட தயாரிப்புகளைப் பயன்படுத்துவது நல்லது.

உடற்பயிற்சி அவசியம்:

ஓட்டப் பயிற்சி, யோகா, நீச்சல் போன்ற ஏதாவது ஒன்றைச் செய்யுங்கள். உடற்பயிற்சி சருமத்திற்கு நன்மை செய்வதோடு, உங்கள் மனநிலையை மேம்படுத்தும். வாரம் 3 மணி நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம்.

இது ரத்த ஓட்டத்தை மேம்படுத்தும், நச்சுகளை அகற்றும், சருமத்திற்கு வழங்கப்படும் ஆக்ஸிஜனின் அளவை அதிகரிக்கும், மன அழுத்தத்தைக் குறைக்கும். முழு உடலையும் அமைதிப்படுத்தும் எண்டோர்பின்களைத் தூண்டும்.

சரும பராமரிப்புப் பழக்கம்

சருமத்தை தூய்மையாக்குவது, டோனிங் செய்தல் மற்றும் ஈரப்பதமூட்டுதல் போன்ற பழக்கங்கள் ஆரோக்கியமான சருமத்திற்கு அவசியம். இந்த முறையைப் பின்பற்ற நீங்கள் பயன்படுத்தும் தயாரிப்புகளை உங்கள் தோலின் தன்மையைப் பொறுத்து, தேர்ந்தெடுக்க வேண்டும். காலை அல்லது இரவில் சருமப் பராமரிப்புப் பழக்கங்களைப் பின்பற்றுங்கள்.

இறந்த செல்களை நீக்குங்கள்

இறந்த செல்களை நீக்குவது பளபளப்பான சருமத்திற்கு முக்கியமானதாகும். இது புதிய மற்றும் ஆரோக்கியமான செல்கள் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உளுந்து மாவு அல்லது காபி தூள் ஸ்கிரப் போன்ற பொருட்களைப் பயன்படுத்தி சருமத்தில் படியும் இறந்த செல்களை நீக்கலாம்.


Next Story