தேசிய எளிமை தினம்
தொழில்நுட்பம், இன்றைய காலகட்டத்தில் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. ஆகையால் அதில் இருந்து முழுவதும் விலகி வாழ முடியாது. ஆனால், அவற்றின் தேவையைக் குறைத்துக்கொள்ள முடியும்.
வாழ்க்கைப் பயணத்தை சிறப்பானதாக அமைத்துக்கொள்ள எளிமையான வாழ்க்கை முறை உதவும். எளிமையான வாழ்க்கையை பரிபூரணமாக உணர்ந்தால் மட்டுமே, அந்த வாழ்க்கையை நம்மால் ஏற்றுக்கொண்டு வாழ முடியும். தற்போது நவீன தொழில்நுட்பம், இயந்திர வாழ்க்கை என மனம் மற்றும் உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் வகையில் பல்வேறு இடையூறுகள் உள்ளன. இத்தகைய சூழலில் வாழ்க்கைக்குத் தேவையில்லாதவற்றை பெருக்கி, நாமே வாழ்வை சிக்கலாக்கிக் கொள்கிறோம்.
தொழில்நுட்பம், இன்றைய காலகட்டத்தில் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகிவிட்டது. ஆகையால் அதில் இருந்து முழுவதும் விலகி வாழ முடியாது. ஆனால், அவற்றின் தேவையைக் குறைத்துக்கொள்ள முடியும். ஒவ்வொரு பிரச்சினைக்கும் ஒரு தீர்வு உண்டு. வாழ்வின் அத்தியாவசிய தேவையை அறிந்து, அதற்கேற்ப செயல்படும்போது மனம் அமைதி பெறும்.
இத்தகைய கருத்துக்களை முன்வைத்து, தன் வாழ்நாள் முழுவதும் எளிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்த அமெரிக்க எழுத்தாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர், கவிஞர் மற்றும் ஆழ்நிலை நிபுணர் ஹென்றி டேவிட் தோரேவின் பிறந்த நாளே (ஜூலை 12) ஆண்டுதோறும் 'தேசிய எளிமை தின'மாக கொண்டாடப்பட்டு வருகிறது.
நம்மைச் சுற்றியுள்ள சூழல் எப்படி இருந்தாலும், நாம் எப்படி வாழ்கிறோம் என்பதே முக்கியம். நமக்கான நேரத்தை ஒதுக்கி, நம்முடைய தேவையின் முக்கியத்துவத்தை அறிந்து செயல்பட்டால் 'எளிமை' என்பது எப்போதும் சாத்தியமே.