ஓய்வுபெற்ற ரேஷன் கடை ஊழியர் ஏரியில் மூழ்கி பலி


ஓய்வுபெற்ற ரேஷன் கடை ஊழியர் ஏரியில் மூழ்கி பலி
x

ஓய்வுபெற்ற ரேஷன் கடை ஊழியர் மீன் பிடித்தபோது வலையில்சிக்கி ஏரியில் மூழ்கி பலியானார்.

வேலூர்

குடியாத்தம் ெரயில் நிலையம் அருகே உள்ள பார்வதிபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 63). ஓய்வு பெற்ற ரேஷன் கடை ஊழியர். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது வீட்டிற்கு அருகே உள்ள வேப்பூர் ஏரியில் விஜயன் அடிக்கடி வலை வீசி மீன் பிடிப்பது வழக்கம். அதன்படி கடந்த திங்கட்கிழமை மதியம் மீன் பிடிக்க சென்றுள்ளார். அப்போது அவர் ஏரியில் தவறி விழுந்து, வலையில் கால்கள் சிக்கிக் கொண்டது. இதனால் நீச்சல் அடிக்க முடியாமல் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துள்ளார்.

மீன் பிடிக்கச் சென்ற விஜயன் மீண்டும் வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் பல இடங்களில் தேடியும் எந்த வித தகவலும் கிடைக்க வில்லை. இந்தநிலையில் ஏரியில் விஜயன் பிணமாக கிடந்துள்ளார். இது குறித்து குடியாத்தம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின்பேரில் நிலைய அலுவலர் லோகநாதன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சென்று விஜயனின் உடலை மீட்டனர்.

குடியாத்தம் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார் விஜயனின் உடலை பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story