வீட்டிலேயே 3டி பிரிண்டிங் தொழில் தொடங்கலாம்


வீட்டிலேயே 3டி பிரிண்டிங் தொழில் தொடங்கலாம்
x
தினத்தந்தி 11 Dec 2022 7:00 AM IST (Updated: 11 Dec 2022 7:00 AM IST)
t-max-icont-min-icon

தனித்து 3டி பிரிண்டிங் இயந்திரம் வாங்கி தொழில் தொடங்குவதை விட, ஒரு தொழில் துறையின் கீழ் வாங்கும்போது குறைந்தபட்சம் 60 ஆயிரம் ரூபாய்க்குள் வாங்கலாம். மேலும், அதற்கான மூலப்பொருட்கள் மற்றும் செய்முறை விளக்கம், கையாளும் விதம் பற்றி அந்த தொழில் துறையைச் சார்ந்தவர்களே பயிற்சி அளிப்பார்கள்.

பெரும்பாலான பெண்கள், சுயதொழில் செய்வதற்கு முடிவெடுக்கும்போது வீட்டில் இருந்தபடியே மேற்கொள்ளக்கூடியவையே முதல் தேர்வாக இருக்கும். சுயதொழில் செய்யும்போது தனித்துவமான, எளிதில் வாடிக்கையாளரை ஈர்க்கக்கூடிய பொருட்களைத் தயாரிக்கும்போது வெற்றி பெறமுடியும். அந்த வகையில், இன்றைய டிஜிட்டல் உலகில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக்கூடிய 3டி பிரிண்டிங் தொழில் குறித்து இங்கு பார்க்கலாம்.

3டி பிரிண்டிங் என்பது வளர்ந்து வரும் தொழிலாகும். இது கடந்த ஐந்து வருடங்களில் 25 சதவிகித முன்னேற்றத்தை அடைந்துள்ளது. படங்கள், சிலைகள், பொம்மைகள், பரிசு மற்றும் அலங்காரப் பொருட்கள், உருவ மாதிரிகள், கலைப் பொருட்கள், கண்ணாடி பிரேம்கள், இயர் பட்ஸ், நகைகள், டூல்ஸ், ஷூ மற்றும் ஆடை வடிவமைப்புப் பொருட்கள் போன்றவற்றை 3டி பிரிண்டிங் கொண்டு தயாரிக்க முடியும். தவிர, பெரிய அளவில் தொழில் துறை, கட்டிடங்கள் மற்றும் கட்டுமானத்துறையில் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

முதலில் எவ்வகையான பொருளைத் தயாரிக்கப் போகிறீர்கள் என்பது பற்றி முடிவு எடுக்க வேண்டும். பொதுவாக மரம் மற்றும் பிளாஸ்டிக்கை மூலப்பொருளாகக் கொண்டே 3டி பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன. வீட்டில் இருந்து செய்யக்கூடிய வகையிலான சிறிய 3டி பிரிண்டிங் இயந்திரத்தை முதல் கட்டமாக பயன்படுத்தலாம். இதற்கு 10 x 10 நீள அகலம் கொண்ட இடம் இருந்தாலே போதுமானது. உதவி ஆட்கள் தேவையில்லை.

தனித்து 3டி பிரிண்டிங் இயந்திரம் வாங்கி தொழில் தொடங்குவதை விட, ஒரு தொழில் துறையின் கீழ் வாங்கும்போது குறைந்தபட்சம் 60 ஆயிரம் ரூபாய்க்குள் வாங்கலாம். மேலும், அதற்கான மூலப்பொருட்கள் மற்றும் செய்முறை விளக்கம், கையாளும் விதம் பற்றி அந்த தொழில் துறையைச் சார்ந்தவர்களே பயிற்சி அளிப்பார்கள்.

3டி பிரிண்டிங் பொருட்களை ஆன்லைன் மூலம் வாங்குபவர்களே அதிகம். ஆகையால் ஆன்லைன் விற்பனை தளங்கள், சமூக வலைத்தளப் பக்கங்கள் மற்றும் தொழில்துறை சார்ந்த இணையதளப் பக்கங்கள் மூலம் விற்பனை செய்யலாம். பொருளுக்கான விலை, பொருளின் அளவைப் பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது.

நிலையான வருமானத்துக்கு பள்ளிக் குழந்தைகளுக்கான பிராஜெக்ட் உருவ மாதிரிகள், கட்டிடங்களின் சிறிய வடிவ மாதிரிகள், திரைத்துறைக்கான செட் அமைப்பு மாதிரிகள், நகை மற்றும் அலங்காரப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடலாம்.

நகல் எடுத்தல், புகைப்பட தயாரிப்பு, வடிவமைப்பு சார்ந்த தொழில் செய்பவர்கள், கம்ப்யூட்டர் பயனாளர்கள், இ-சேவை மையம் வைத்திருப்பவர்கள் ஆகியோர் இந்த 3டி பிரிண்டிங் தொழிலை மேற்கொண்டால் கூடுதல் பலன் பெறலாம்.


Next Story