உலக தைராய்டு தினம்


உலக தைராய்டு தினம்
x

தைராய்டு நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே மாதம் 25-ந் தேதி ‘உலக தைராய்டு தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.

லகம் முழுவதும் பலரை பாதித்துள்ள தைராய்டு பிரச்சினை, ஆண்-பெண் இரு பாலருக்கும் வரக்கூடியது. இது தைராய்டு சுரப்பியின் இயக்கத்தில் ஏற்படும் மாறுதல் காரணமாக உண்டாகிறது. தைராய்டு சுரப்பி, கழுத்தின் கீழ்ப்பகுதியின் மையத்தில் வண்ணத்துப்பூச்சி வடிவில் இருக்கும்.

இதில் இருந்து வளர்சிதை மாற்றங்களைக் கட்டுப்படுத்தும் தைராக்ஸின் என்ற ஹார்மோன் உற்பத்தியாகிறது. இது உடலில் உள்ள செல்கள் எவ்வளவு சக்தியைப் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கட்டுப்படுத்தும் திறன் கொண்டது.

தைராக்ஸின் அதிகப்படியாக சுரக்கும்போது ஹைப்பர் தைராய்டு பிரச்சினையும், குறைவாக சுரக்கும்போது ஹைப்போ தைராய்டு பிரச்சினையும் உண்டாகிறது. ஆண்களை விட, பெண்களுக்கு பத்து மடங்கு அதிகமாக இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இந்நோய் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஆண்டுதோறும் மே மாதம் 25-ந் தேதி 'உலக தைராய்டு தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.

உடல் எடை திடீரென குறைதல் மற்றும் அதிகரித்தல், அடிக்கடி மாதவிடாய் ஏற்படுதல், மாதவிடாயின்போது அதிக ரத்தப்போக்கு, ஞாபக மறதி, எரிச்சல், படபடப்பு, உடல் தசைகளில் பலவீனம், நடுக்கம், தூக்கமின்மை, தைராய்டு சுரப்பி வீங்குதல், முடி உதிர்வு, கைகால் மரத்துப்போதல், மூட்டுவலி மற்றும் கண் எரிச்சல் போன்றவை தைராய்டு நோயின் அறிகுறிகள்.

இந்த ஆண்டின் கருப்பொருளான 'நம் உலகம் நம் ஆரோக்கியம்' என்பதற்கிணங்க, அறிகுறிகள் இருக்கும்போதே தைராய்டு நோய்க்கான பரிசோதனை மேற்கொண்டு, தகுந்த சிகிச்சை எடுத்துக்கொண்டால் இந்நோயின் பிடியிலிருந்து மீளலாம்.


Next Story