செட்டிநாடு ஸ்பெஷல் தும்ப பூவா


செட்டிநாடு ஸ்பெஷல் தும்ப பூவா
x
தினத்தந்தி 7 Aug 2022 1:30 AM GMT (Updated: 7 Aug 2022 1:30 AM GMT)

சுவையான தும்ப பூவா செய்முறையை இங்கு காணலாம்.

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 300 கிராம்

எண்ணெய் - 50 மில்லி

கடுகு - 1 தேக்கரண்டி

உளுந்து - 1 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

துருவிய தேங்காய் - 1 தேக்கரண்டி

துருவிய கேரட் - 1 தேக்கரண்டி

பச்சைப் பட்டாணி - 25 கிராம்

மஞ்சள் பொடி - ஒரு சிட்டிகை

நெய் - சிறிதளவு

அவல் - 150 கிராம்

பச்சை மிளகாய் - 4

முந்திரி - 50 கிராம்

கொத்தமல்லி, கறிவேப்பிலை - சிறிதளவு

செய்முறை:

உருளைக்கிழங்கை வேக வைத்து, மேல் தோலை நீக்கிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பட்டாணியை வேக வைத்து, தனியாக வைக்கவும்.

புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து, சாற்றை வடிகட்டவும். அதில் அவலைக் கொட்டி ஊற வைக்கவும்.

வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகு மற்றும் உளுந்து போட்டு பொரிந்ததும், பச்சை மிளகாயை சேர்த்து வதக்கவும்.

பிறகு அதில் ஊற வைத்த அவல், வேகவைத்த பட்டாணி மற்றும் உருளைக்கிழங்குத் துண்டுகளை சேர்த்து நன்றாகக் கிளறவும். கலவையில் தேவையான உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து 2 முதல் 3 நிமிடங்கள் நன்றாகக் கலக்கவும். அடுப்பில் இருந்து இறக்குவதற்கு முன்பு சிறிது கொத்தமல்லி, கறிவேப்பிலையை தூவவும். இப்போது 'தும்ப பூவா' தாயாராகிவிட்டது.

ஒரு கிண்ணத்தில் தும்ப பூவாவை நிரப்பி, அதை ஒரு தட்டில் கவிழ்த்து வைக்கவும். அதன் மீது வறுத்த முந்திரி, துருவிய கேரட், துருவிய தேங்காய் ஆகியவற்றை தூவி அலங்கரிக்கவும். இது, மாலை நேர சிற்றுண்டியாக சாப்பிடுவதற்கு ஏற்றது.


Next Story