ரம்ஜான் ஸ்பெஷல் 'நிஹாரி'


ரம்ஜான் ஸ்பெஷல் நிஹாரி
x
தினத்தந்தி 16 April 2023 7:00 AM IST (Updated: 16 April 2023 7:00 AM IST)
t-max-icont-min-icon

ரம்ஜான் பண்டிகையையொட்டி நிஹாரி ரெசிபி செய்வது குறித்து பார்ப்போம்.

தேவையான பொருட்கள்:

பிரியாணி இலை - 3

தனியா - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 6

கருப்பு ஏலக்காய் - 2

பச்சை ஏலக்காய் - 6

அன்னாசி பூ - 1

கடுக்காய் - 1 சிறியது

கிராம்பு - 6

சீரகம் - 1 டீஸ்பூன்

பட்டை - 2 துண்டு

ஜாதிப்பத்திரி - 3 துண்டு

கருஞ்சீரகம் - ½ டீஸ்பூன்

சோம்பு - 1 டேபிள் ஸ்பூன்

ஆட்டுக்கறி - 500 கிராம்

இஞ்சி பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்

மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்

காஷ்மீரி மிளகாய்த்தூள் - 2½ டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

சுக்குப்பொடி - 1 டீஸ்பூன்

எண்ணெய் - 1 கப்

வெங்காயம் - 2

கோதுமை மாவு - 4 டீஸ்பூன்

நெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

நிஹாரி மசாலா தயாரிப்பதற்கு பிரியாணி இலை, தனியா, மிளகு, காய்ந்த மிளகாய், ஏலக்காய், அன்னாசி பூ, கடுக்காய், கிராம்பு, சீரகம், பட்டை, ஜாதி பத்திரி, கருஞ்சீரகம், சோம்பு ஆகியவற்றை மிதமான தீயில் வறுத்து பொடியாக்கிக் கொள்ளவும். இவை 1 கிலோ ஆட்டுக்கறிக்கான மசாலா அளவாகும்.

500 கிராம் ஆட்டுக்கறியுடன் மல்லித்தூள், சுக்குப்பொடி, 2 டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய்த்தூள், தேவையான அளவு உப்பு, இஞ்சி பூண்டு விழுது மற்றும் அரைத்து வைத்துள்ள 'நிஹாரி' மசாலாவில் பாதி அளவு சேர்த்து நன்றாகப் பிசைந்து கலந்து கொள்ளவும். இந்தக் கலவையை ஒரு மணி நேரம் அப்படியே மூடி வைக்கவும்.

பின்பு பிரஷர் குக்கரில் ஒரு கப் அளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். அதில் பொடிதாக நறுக்கிய ஒரு வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். அதனுடன் ஊற வைத்துள்ள ஆட்டுக்கறி கலவையை சேர்த்து, கறி பொறியும் வரை வறுக்கவும். சிறிது நேரத்தில் எண்ணெய் பிரிந்து மேலே வரும். அப்போது இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி குக்கரை மூடி கறியை வேக வைக்கவும். இரண்டு விசில் வந்து ஆவி அடங்கியதும் குக்கரை திறக்கவும்.

வெந்திருக்கும் கலவையில் சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். ஒரு கிண்ணத்தில் கோதுமை மாவுடன் தண்ணீர் ஊற்றி கட்டி இல்லாமல் கரைக்கவும். இந்தக் கரைசலை அடுப்பில் இருக்கும் கலவையில் ஊற்றி கிளறவும். கலவை சிறிது சிறிதாக கெட்டியாக ஆரம்பிக்கும். பிறகு அதனை மூடி குறைவான தீயில் 10 நிமிடம் கொதிக்க வைக்கவும்.

இப்போது வாணலியில் நெய் ஊற்றி அது சூடானதும், அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு அதனுடன் அரை டீஸ்பூன் காஷ்மீரி மிளகாய் தூள், அரை டீஸ்பூன் 'நிஹாரி மசாலா' சேர்த்து வறுக்கவும். பின்பு இந்த தாளிப்பை கொதித்துக் கொண்டிருக்கும் நிஹாரியுடன் சேர்த்து கிளறவும். இப்போது சுவையான 'மட்டன் நிஹாரி' தயார்.


Next Story