இளம்பெண்களை அதிகம் பாதிக்கும் 'டிரை ஐ சிண்ட்ரோம்'


இளம்பெண்களை அதிகம் பாதிக்கும் டிரை ஐ சிண்ட்ரோம்
x
தினத்தந்தி 26 Jun 2022 1:30 AM GMT (Updated: 26 Jun 2022 1:30 AM GMT)

கண்ணீரால் கண்களுக்குப் போதுமான உயவுத்தன்மையை வழங்க முடியாமல் போகும் நிலைக்கு ‘டிரை ஐ சிண்ட்ரோம்’ என்று பெயர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கண்களுக்குத் தேவையான அளவு கண்ணீரை உற்பத்தி செய்ய முடியாது அல்லது கண்களின் ஈரப்பதத்தை பராமரிக்க முடியாத அளவிற்கு குறைவான அளவு கண்ணீர் உற்பத்தி ஆகும்.

குறைந்த வெளிச்சத்தில் படிப்பது, நீண்ட நேரம் ஒரே இடத்தையோ, பொருளையோ பார்ப்பது, தொடர்ந்து நுணுக்கமான வேலைப்பாடுகளில் ஈடுபடும் பெண்கள் மற்றும் நீண்ட நேரம் கணினி மற்றும் செல்போன் பார்ப்பவர்களை அதிகம் பாதிக்கும் வாழ்வியல் நோய், 'டிரை ஐ சிண்ட்ரோம்'.

மேலும் இது அதிக நேரம் ஏர் கண்டிஷனரில் நேரத்தை செலவிடுபவர்கள், கண் கண்ணாடி மற்றும் லென்ஸ் பயன்படுத்துபவர்கள், வெப்பமான சூழலில் வேலை செய்பவர்கள் மற்றும் குறைவான தூக்கம் உள்ளவர்களையும் பாதிக்கும். 100-ல் 80 பேர் கண் வறட்சி பாதிப்புக்கு உள்ளாகிறார்கள் என்கிறது ஆய்வு முடிவுகள். குறிப்பாக 20 முதல் 40 வயதுக்குட்பட்டவர்களே அதிகமாக பாதிப்புக்கு உள்ளாகும் 'டிரை ஐ சிண்ட்ரோம்' குறித்து இங்கு பார்ப்போம்.

கண்ணீரால் கண்களுக்குப் போதுமான உயவுத்தன்மையை வழங்க முடியாமல் போகும் நிலைக்கு 'டிரை ஐ சிண்ட்ரோம்' என்று பெயர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கண்களுக்குத் தேவையான அளவு கண்ணீரை உற்பத்தி செய்ய முடியாது அல்லது கண்களின் ஈரப்பதத்தை பராமரிக்க முடியாத அளவிற்கு குறைவான அளவு கண்ணீர் உற்பத்தி ஆகும். இன்னும் சிலருக்கு இயல்பாகவே கண்களில் வறட்சி ஏற்படும். இப்பிரச்சினை நீண்ட காலம் வறட்சியை ஏற்படுத்தும்போது கண்களில் வீக்கம் ஏற்படும்; கண்களின் மேற்பரப்பு சேதமடையும்.

கண் நீர்ப்படலம், நீர், எண்ணெய்த்தன்மை மற்றும் புரதம் என்ற மூன்று அடுக்குகளைக் கொண்டது. காற்றில் உள்ள ஈரப்பதம் குறைந்து வறண்டு இருக்கும் சூழல், தன்னிச்சையாகவே கண்களில் உள்ள நீர்த்தன்மையைக் குறைத்து விடும்.

இவ்வாறு காற்றில் ஏற்படும் அதீத வறட்சி, கண் இமைகளில் சுரக்கும் கொழுப்பு அமிலத்தின் அளவை குறைத்து, கண்களை மூடித் திறப்பதில் பாதிப்பை உண்டாக்கும். தொடர்ந்து கண்களை இமைக்காமல், திறந்து வைத்திருக்கும்போது கண்களில் உலர்தன்மை அதிகரிக்கும்.

தடுக்கும் வழிகள்:

* நீர் வறட்சி ஏற்படாத அளவு, உடலுக்குத் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.

* தினமும் கண்களுக்கு மசாஜ் செய்யலாம்.

* புகை, தூசு, காற்று ஆகியவை நேரடியாக கண்களில் படுவதைத் தவிர்க்கவும்.

* 20 நிமிடங்களுக்கு ஒரு முறை, நீங்கள் செய்யும் வேலையில் இருந்து கண்களுக்கு ஓய்வு கொடுங்கள்.

* மருத்துவரின் ஆலோசனை படி ஐ-ரெப்ரெஷர் பயன்படுத்தலாம்.

* தினமும் கண்களை குளிர்ச்சியாக்கும் இயற்கை அழகுப் பொருட்களைப் பயன்படுத்தலாம்.


Next Story