மண்ணில் புதைத்து வைத்திருந்த 650 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்-3 பேர் கைது


மண்ணில் புதைத்து வைத்திருந்த 650 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல்-3 பேர் கைது
x

பாழடைந்த வீட்டில் அருகில் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த 650 கிலோ செம்மரக்கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோலார் தங்கவயல்:

650 கிலோ எடை

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் ஒசக்கோட்டை தாலுகா கட்டிகேனஹள்ளி கிராமம் அருகே உள்ள பாழடைந்த வீட்டில் மண்ணுக்குள் செம்மரக்கட்டைகள் புதைத்து வைத்திருப்பதாக ஒசக்கோட்டை போலீசாருக்கும், வனத்துறையினருக்கும் ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஒசக்கோட்டை மண்டல போலீஸ் துணை சூப்பிரண்டு உமாசங்கர் தலைமையில் வனக்காவலர்கள் கட்டிகேனஹள்ளி அருகே உள்ள வனப்பகுதிக்கு சென்றனர்.

பின்னர் அந்த பகுதியில் இருந்த பாழடைந்த வீட்டில் சோதனை செய்தனர். மேலும், அந்த வீட்டின் அருகில் மண்ணை தோண்டினர். அதில் செம்மரக்கட்டைகள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து 650 கிலோ எடை கொண்ட செம்மரக்கட்டைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட செம்மரக்கட்டைகளின் மதிப்பு பல கோடி ரூபாய் இருக்கும் என கூறினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தினர்.

3 பேர் கைது

விசாரணையில் செம்மரக்கட்டைகளை வெட்டி பதுக்கி வைத்ததாக கட்டிகேனஹள்ளி கிராமத்தை சேர்ந்த அயாஸ்கான், ஜமீர் மற்றும் இர்ப்பான் ஆகிய 3 ேபர் என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story