நகரும் படிக்கட்டுகளை பயன்படுத்துகிறீர்களா?


நகரும் படிக்கட்டுகளை பயன்படுத்துகிறீர்களா?
x
தினத்தந்தி 11 Sep 2022 1:30 AM GMT (Updated: 11 Sep 2022 1:30 AM GMT)

குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெற்றோர்களும், வயதானவர்களும் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை தெரிந்து கொள்வது நல்லது.

'மிதக்கும் அல்லது நகரும் படிக்கட்டு' என்று அழைக்கப்படும் எஸ்கலேட்டர் இப்பொழுது பெரும்பாலான இடங்களில் காணப்படுகிறது. படிக்கட்டு ஏற சிரமப்படும் முதியவர்களுக்கும், வேலைக்கு செல்பவர்களுக்கும், குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கும் எஸ்கலேட்டர் மிகவும் உதவியாக இருக்கிறது. விழிப்புணர்வு இல்லாமல் எஸ்கலேட்டரில் பயணம் செய்வது பாதுகாப்பானது இல்லை. குழந்தைகளுடன் பயணம் செய்யும் பெற்றோர்களும், வயதானவர்களும் சில பாதுகாப்பு நடவடிக்கைகளை தெரிந்து கொள்வது நல்லது. அவற்றில் சிலவற்றை இங்கே காணலாம்:

குழந்தைகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கை:

1) குழந்தைகளுடன் எஸ்கலேட்டரில் ஏறும் பெற்றோர்கள் அதில் அவர்களை உட்காரவிடக்கூடாது. ஏனெனில், அவர்களின் ஷூ லேஸ் அல்லது உடை நகரும் படிக்கட்டில் மாட்டிக்கொள்ளும் அபாயம் உள்ளது.

2) குழந்தைகள் துருதுருவென்று செயல்படுவார்கள். அதனால் எஸ்

கலேட்டரில் செல்லும் போது அவற்றின் பக்கவாட்டில் இருக்கும் கைப்பிடியைப் பிடித்து விளையாடுவார்கள். இதனால் எஸ்கலேட்டரில் பயணம் செல்லும் போது குழந்தைகளை பெற்றோர் உன்னிப்பாக கவனிக்க வேண்டும்.

3) குழந்தைகள் வேகமாக எஸ்கலேட்டரில் பெற்றோர்களை விட்டு ஏறி விடுவதும் உண்டு. எஸ்

கலேட்டரில் குழந்தைகள் தனியாக பயணம் செய்ய பெற்றோர்கள் அனுமதிக்க கூடாது. தொலைபேசியைப் பயன்படுத்தாமல், கவனச் சிதறல் இல்லாமல் குழந்தைகளின் விரல்களைப் பிடித்துக்கொண்டு பயணம் செய்ய வேண்டும்.

4) இறங்கும் எஸ்கலேட்டரில் ஏறவும், ஏறும் எஸ்கலேட்டரில் இறங்கவும் குழந்தைகளை அனு மதிக்க கூடாது.

5) முதன்முறையாக எஸ்கலேட்டரை பயன்படுத்தும் குழந்தைகளுக்கு அவற்றை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை முன்கூட்டியே பெற்றோர்கள்

கற்றுத்தர வேண்டும். மஞ்சள் நிற கோட்டிற்கு முன்னால் கால் வைக்க வேண்டும். கைப்பிடியை பிடிக்க வேண்டும். இறங்கும் பொழுது உடனடியாக இறங்க வேண்டும். பின்னோக்கி பார்த்து பயணம் செய்யக்

கூடாது போன்ற முன்னெச்சரிக்கை விழிப்புணர்வு குழந்தைகளுக்கு அவசியமானதாகும்.

முதியவர்களுக்கான பாதுகாப்பு நடவடிக்கை:

1) முதியவர்கள் வயதின் காரணமாக பொறுமையாகவும், நிதானமாகவும் நடப்பார்கள். ஆனால், எஸ்கலேட்டரில் ஏறும்பொழுதும், இறங்கும்பொழுதும் சற்று வேகமாக செயல்பட வேண்டும். குறிப்பாக இறங்கும் பொழுது ஒரு காலை எடுத்து வைத்தப்

பிறகு உடனடியாக எஸ்கலேட்டரில் இருந்து இன்னொரு காலையும் வெளியேற்றி விட வேண்டும்.

2) படிக்கட்டின் விளிம்பில் காலை வைத்து ஏறினால் அவை சறுக்கி விடும் அபாயம் உள்ளது. இதனால், படிக்கட்டின் நடுப்பகுதியில் தான் காலை வைத்து ஏற வேண்டும்.

3) நிறைய பைகள் அல்லது பொருட்களுடன் முதியவர்கள் எஸ்கலேட்டரில் பயணம் செய்யக்கூடாது. எஸ்கலேட்டருக்கு பதிலாக அவர்கள் லிப்ட்டை பயன்படுத்தலாம்.

4) ஏதேனும் சந்தர்ப்பத்தில் முதியவர்கள், குழந்தை களை அழைத்து வந்தால் அவர்கள் எஸ்கலேட்டரை விட லிப்ட்டை பயன்படுத்துவதே பாதுகாப்பானதாகும்.

5) எஸ்கலேட்டரில் முதியவர்கள் நீளமான உடை அணிந்தோ அல்லது வெறும் காலுடனோ பயணம் செய்வதைத் தவிர்க்க வேண்டும். ஏதேனும் அவசர நிலை ஏற்பட்டால் உடனடியாக எஸ்கலேட்டரின் வாசலில் இருக்கும் அவசரகால பட்டனை பயன்படுத்தி நகரும் படிக்கட்டை உடனடியாக நிறுத்த வேண்டும்.


Next Story