'பிரீமியம் ராப்'களால் உணவை 'பிரஷ்' ஆக பாதுகாக்கலாம்
சமைத்த உணவுகளை முடிந்தவரை பீங்கான், எவர்சில்வர் பாத்திரங்களில் வைத்து அதன் மேல் பிரீமியம் ராப் தாளை இறுக்கமாகச் சுற்றி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் உணவின் தன்மையை பாதுகாக்கலாம்.
உணவுப் பொருட்களை சமைப்பதும், பாதுகாப்பதும் அதிக கவனமுடன் செய்ய வேண்டியவை. நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் இதற்காக பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அவற்றில் எளிதானது 'பிரீமியம் ராப்' எனும் மெல்லிய பிளாஸ்டிக் தாள்கள்.
சப்பாத்திகள், ரொட்டிகள், அடுத்த நாள் சமைப்பதற்காக முந்தைய இரவே வெட்டி வைத்த காய்கறிகள், சமையல் பொருட்கள், மீதமான உணவு, காய்கறி, பழங்கள் என அனைத்தையும் பிரீமியம் ராப் தாளில் சுற்றி குளிர்சாதனப் பெட்டியில் வைக்கலாம். இதனால் அவை உலராமல் புதியது போலவே இருக்கும்.
பிரீசரில் வைக்கும் உணவுப் பொருட்களும் நீண்ட நேரம் உலராமல் பாதுகாப்பாக இருக்கும். இதன் மூலம் உணவு வீணாவதைத் தடுக்க முடியும்.
உணவுகளை பேக்கிங் செய்யவும், சமைத்த உணவை மீண்டும் சூடுப்படுத்தவும் உபயோகப்படுத்தப்படும் மைக்ரோவேவ் ஓவனில் பிரீமியம் ராப்களை எளிதில் பயன்படுத்தலாம். மைக்ரோவேவில் 140 டிகிரி செல்சியஸ் வரை வெப்பத்தைத் தாங்கும் எந்த தயாரிப்பையும் பயன்படுத்தலாம்.
பிரீமியம் ராப்களில் காற்றை உட்புகுத்தும் தன்மை குறைவாக இருக்கும். எனவே உணவுகளில் ஈரப்பதம் அதிகரித்து நீர்த்துளிகள் சேர்வது, ஆக்சிஜனேற்றம் அடைந்து நிறம் மாறுவது போன்றவற்றை தடுக்கும். சமைத்த உணவுகளை முடிந்தவரை பீங்கான், எவர்சில்வர் பாத்திரங்களில் வைத்து அதன் மேல் பிரீமியம் ராப் தாளை இறுக்கமாகச் சுற்றி, குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் உணவின் தன்மையை பாதுகாக்கலாம்.
பிரீமியம் ராப் வாங்கும்போது தரமான பிளாஸ்டிக் மூலம் தயாரிக்கப்பட்டதா என்பதை உறுதிசெய்து கொள்வது நல்லது.