மலைப் பிரதேச கோவில்களுக்கு பயணிக்கும் பெண்களின் கவனத்துக்கு...


மலைப் பிரதேச கோவில்களுக்கு பயணிக்கும் பெண்களின் கவனத்துக்கு...
x
தினத்தந்தி 26 Feb 2023 1:30 AM GMT (Updated: 26 Feb 2023 1:31 AM GMT)

ஆடம்பரமான உடைகளைத் தவிர்த்து, லேசான பருத்தி ஆடைகளை உடுத்திச்செல்வது சவுகரியமான உணர்வைத் தரும். அதிக நகைகளை அணிந்து செல்வது தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்கலாம்.

ன்மிகத் தலங்களுக்கு செல்லும் ஆர்வம் உள்ள பலர், நேரம் கிடைக்கும்போது திடீர் பயணங்கள் மேற்கொள்வது உண்டு. அவ்வாறு மலைப் பிரதேச கோவில்களுக்கு திடீர் பயணம் செல்லும் நேரத்தில், பெண்கள் கவனத்தில் கொள்ளவேண்டிய விஷயங்கள் இதோ…

* மலைப் பிரதேசங்களில் பயணிப்பதற்கு ஏற்ற வகையில் உங்கள் உடல்நிலை இருக்கிறதா? என்று மருத்துவரிடம் சென்று பரிசோதித்துக் கொள்வது முக்கியமானது.

* பயணத்துக்கு தேவையான எல்லாப் பொருட்களையும் மறக்காமல் எடுத்து வைத்திருக்கிறோமா? என்று சரிபார்த்துக்கொள்வது நல்லது.

* மலைக் கோவில்களில் படியேறி மேலே நடக்க வேண்டி இருப்பதால் போதுமான அளவு தண்ணீர் கொண்டு செல்ல வேண்டும். அடிக்கடி தண்ணீர் பருகுவது உங்கள் உடல் வெப்பநிலையை சீராக வைத்திருப்பதோடு, களைப்பையும் நீக்கும்.

* குடையை பயன்படுத்திக் கொண்டால், வெயிலின் தாக்கத்தில் இருந்து சருமத்தைப் பாதுகாக்கலாம்.

* நீங்கள் செல்லவிருக்கும் இடத்தின் காலநிலைக்கு ஏற்றவகையில் ஸ்வெட்டரோ அல்லது ரெயின் கோட்டோ எடுத்துச் செல்லுங்கள்.

* ஆடம்பரமான உடைகளைத் தவிர்த்து, லேசான பருத்தி ஆடைகளை உடுத்திச்செல்வது சவுகரியமான உணர்வைத் தரும். அதிக நகைகளை அணிந்து செல்வது தேவையற்ற பிரச்சினைகளை உண்டாக்கலாம்.

* மலைக் கோவில்களில் படிக்கட்டுகள் ஏறுவதால் பெண்களுக்கு மூட்டு வலி வரலாம். எனவே வலி நிவாரண மருந்துகளை கைப்பையில் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். நீங்கள் தொடர்ச்சியாக மருந்து மாத்திரைகள் உட்கொள்பவராக இருந்தால், அவற்றையும் மறக்காமல் எடுத்துச் செல்ல வேண்டும்.

* பெண்கள் எப்போதும் தங்கள் பயணங்களில் சானிடரி நாப்கின்களை வைத்திருப்பது நல்லது. கூடுதலாக மாற்றுத்துணி கொண்டு செல்வது அவசியமானது.

* படிக்கட்டுகளில் ஏறுவதற்கு வசதியான காலணிகளை அணியுங்கள். சாப்பிடுவதற்கு ஏற்ற உலர்ந்த உணவுகளைக் கையில் எடுத்துச் செல்லுங்கள்.

* தனியாக செல்வதைத் தவிர்த்து, உடன் நம்பிக்கைக்கு உரியவர்களை அழைத்துச் செல்வது பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகுக்கும்.

* கோவில்களில் பின்பற்றப்படும் விதிமுறைகளை முன்கூட்டியே அறிந்துகொண்டு, அவற்றின்படி நடந்து கொள்வது சிறந்தது.

* கோவில்களில் கூட்ட நெரிசலில் சிக்கிக் கொள்வதைத் தவிர்க்க சரியான நேரத்துக்குச் செல்லும் வழக்கத்தை பின்பற்ற வேண்டும்.

* கைப்பேசி மற்றும் உங்கள் உடைமைகளை உரிய இடங்களில் டோக்கன் பெற்றுக்கொண்டு செயல்படுவது பாதுகாப்பாக இருக்கும்.


Next Story