பழைய டி-ஷர்ட்டில் பயனுள்ள தயாரிப்புகள்


தினத்தந்தி 26 March 2023 1:30 AM GMT (Updated: 26 March 2023 1:30 AM GMT)

கண்கள் சோர்வாக இருக்கும்போது 'ஐ மாஸ்க்' பயன்படுத்தினால் புத்துணர்ச்சியை பெறுவீர்கள்.

'சன் கிளாஸ்' பவுச்

தேவையான பொருட்கள்:

பழைய டி ஷர்ட்

ஊக்கு

குண்டூசி

லேஸ்

நூல்

ஊசி

அளவுகோல்

செய்முறை:

1. முதலில் துணியை 8X6 அங்குல நீளம், அகலம் கொண்ட செவ்வக வடிவில் வெட்டிக்கொள்ளவும். துணியை வெட்டும்போதும், தைக்கும்போதும் அளவுகள் மாறாமல் இருக்க குண்டூசியைப் பயன்படுத்தலாம்.

2. இப்போது துணியை நீளவாக்கில் வைத்தபடி இரண்டாக மடிக்கவும். அதன் கீழ் மற்றும் பக்கவாட்டுப் பகுதியின் ஓரங்களை ஊசி, நூல் கொண்டு தைக்கவும்.

3. இப்போது துணி ஒரு பை போன்ற வடிவில் கிடைக்கும். துணிப் பையின் மேல் பகுதியில் ஒன்றரை அங்குலம் அளவு வெளிப்புறமாக மடிக்கவும். 'லேஸ்' உள்ளே நுழைப்பதற்கு ஏற்றவாறு, சிறிதளவு இடைவெளி விட்டு அந்த பகுதியை தைக்கவும்.

4. பின்னர் துணியை உள்ளிருந்து வெளிப்பக்கமாகத் திருப்பவும். இப்போது ஊக்கைப் பயன்படுத்தி லேஸ்ஸை கைப்பிடி போன்று, மடித்த துணிப் பகுதியின் ஒரு புறத்தில் நுழைத்து மறுபுறத்தில் வெளியே எடுக்கவும்.

5. கூலான 'சன் கிளாஸ் பவுச்' ரெடி.

கண்களுக்கான மாஸ்க்

தேவையான பொருட்கள்:

பழைய டி ஷர்ட்

அரிசி 2 கப்

விருப்பமான எசன்ஷியல் எண்ணெய்

சிறிய புனல்

எலாஸ்டிக் ஹெட் பேண்ட்

ஊசி

நூல்

கத்தரிக்கோல்

செய்முறை:

1. அரிசியை ஒரு பவுலில் போட்டு அதனுடன் உங்களுக்கு பிடித்த எசன்ஷியல் எண்ணெய் 10 முதல் 20 துளிகள் ஊற்றி நன்றாகக் கலக்கவும். இதை மைக்ரோவேவ் ஓவனில் 350 டிகிரி பாரன்ஹீட்டில் பேக் செய்து ஆற வைக்கவும்.

2. உங்கள் சன் கிளாஸை அளவாகக்கொண்டு, மாஸ்க்குக்கு தேவையான கட்டிங்கை வரைந்து கொள்ளவும்.

3. பின்னர் அதை வைத்து துணியில் வரைந்து 2 துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

4. பின்பு இரண்டு துணிகளையும் இணைத்து, ஊசி நூல் கொண்டு ஓரங்களை சிறிய இடைவெளி விட்டு முழுவதுமாக தைக்கவும்.

5. இப்போது துணியை உட்புறத்தில் இருந்து வெளிப்பக்கமாகத் திருப்பவும். அதில் உள்ள இடைவெளியில் புனலை நுழைத்து, ஆற வைத்திருக்கும் அரிசியை அதன் வழியாக சிறிது சிறிதாக உள்ளே நிரப்பவும்.

6. பிறகு அந்த இடைவெளியை மூடி, எலாஸ்டிக் ஹெட் பேண்டை துணியின் இரண்டு பக்கமும் இணைக்கவும்.

7. இப்போது அழகான 'ஐ மாஸ்க்' தயார். உங்கள் கண்கள் சோர்வாக இருக்கும்போது இதை பயன்படுத்தினால் புத்துணர்ச்சியை பெறுவீர்கள்.


Next Story