இந்த வார விசேஷங்கள்: 23-9-2025 முதல் 29-9-2025 வரை


இந்த வார விசேஷங்கள்: 23-9-2025 முதல் 29-9-2025 வரை
x

சுவாமிமலையில் இன்று முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

இந்த வார விசேஷங்கள்

23-ந் தேதி (செவ்வாய்)

* மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் ராஜராஜேஸ்வரி அலங்காரம்.

* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் துர்க்கை கோலம்.

* காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், அருப்புக் கோட்டை சவுடாம்பிகை அம்மன் தலங்களில் நவராத்திரி அலங்கார சேவை.

* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.

* சமநோக்கு நாள்.

24-ந் தேதி (புதன்)

* முகூர்த்த நாள்.

* நாட்டரசன்கோட்டை உற்சவம் ஆரம்பம்.

* திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரம்மோற்சவ விழா தொடக்கம்.

* மதுரை நவநீதகிருஷ்ண சுவாமி காலை ராஜாங்கசேவை, மாலை அமிர்த வீணை மோகினி அலங்காரம்.

* சமநோக்கு நாள்.

25-ந் தேதி (வியாழன்)

* மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் பட்டாபிஷேக அலங்காரம்.

* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ரிஷப வாகனத்தில் பார்வதி கோலத்துடன் காட்சி.

* காஞ்சிபுரம் காமாட்சி அம்மன், ராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி, அருப்புக் கோட்டை சவுடாம்பிகை தலங்களில் நவராத்திரி அலங்கார காட்சி.

* சமநோக்கு நாள்.

26-ந் தேதி (வெள்ளி)

* மதுரை தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேசர் ராமாவதார காட்சி.

* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசர் அனுமன் வாகனத்தில் பவனி.

* மதுரை மீனாட்சி அம்மன் கொலு மண்டபத்தில் தட்சிணாமூர்த்தி காட்சி.

* கீழ்நோக்கு நாள்.

27-ந் தேதி (சனி)

* உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசன் கருட வாகனத்தில் பவனி.

* சிருங்கேரி சாரதாம்பாள் மோகினி அலங்காரம்.

* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் காமதேனு வாகனத்தில் பவனி.

* சமநோக்கு நாள்.

28-ந் தேதி (ஞாயிறு)

* குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் சிம்ம வாகனத்தில் மகிஷாசுரமர்த்தினி கோலம்.

* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் சேஷ வாகனத்தில் பவனி.

* திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கருட சேவை

* சமநோக்கு நாள்.

29-ந் தேதி (திங்கள்)

* திருப்பதி ஏழுமலையான் அனுமன் வாகனத்தில் வசந்த உற்சவம், தங்கத் தேரோட்டம்

* உப்பிலியப்பன் கோவிலில் சீனிவாசப் பெருமாள் வெள்ளி பல்லக்கில் புறப்பாடு.

* திருவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் யானை வாகனத்தில் பவனி.

* கீழ்நோக்கு நாள்.

1 More update

Next Story