இந்த வார விசேஷங்கள்: 26-8-2025 முதல் 1-9-2025 வரை

சுவாமிமலை முருகப்பெருமான் 28-ம் தேதி வியாழக்கிழமை தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
இந்த வார விசேஷங்கள்
26-ந் தேதி (செவ்வாய்)
* திருநெல்வேலி நெல்லையப்பர் - காந்திமதியம் மன் ரிஷப வாகனத்தில் பவனி.
* உப்பூர் விநாயகர் ரத உற்சவம்.
* சோழசிம்மபுரம் லட்சுமி நரசிம்மர் புறப்பாடு.
* பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் ரத உற்சவம்.
* சமநோக்கு நாள்.
27-ந் தேதி (புதன்)
* முகூர்த்த நாள்.
* விநாயகர் சதுர்த்தி.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் நாரைக்கு மோட்சம் கொடுத்தல்.
* திருவலஞ்சுழி சுவேத விநாயகர் ரத உற்சவம்.
* விருதுநகர் சொக்கநாதர் விழா தொடக்கம்.
* சமநோக்கு நாள்.
28-ந் தேதி (வியாழன்)
* முகூர்த்த நாள்.
* திருநெல்வேலி குறுக்குத்துறை சுப்பிரமணியர் கோவிலில் ஆவணி உற்சவம் ஆரம்பம்.
* சுவாமிமலை முருகப்பெருமான் தங்கக் கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்.
* திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை.
* சமநோக்கு நாள்.
29-ந் தேதி (வெள்ளி)
* முகூர்த்த நாள்.
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தருமிக்கு பொற்கிழி அருளுதல்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம்.
* ராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி தங்கப் பல்லக்கில் பவனி.
* சமநோக்கு நாள்.
30-ந் தேதி (சனி)
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் புறப்பாடு.
* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* கீழ்நோக்கு நாள்.
31-ந் தேதி (ஞாயிறு)
* குறுக்குத்துறை முருகப்பெருமான் பவனி.
* விருதுநகர் சுவாமி குதிரை வாகனத்திலும், அம்பாள் சிம்ம வாகனத்திலும் பவனி.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் குளக்கரை ஆஞ்சநேயருக்கு அலங்கார திருமஞ்சனம்.
* சமநோக்கு நாள்.
1-ந் தேதி (திங்கள்)
* மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் வளையல் விற்ற திருவிளையாடல்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம்.
* சமநோக்கு நாள்.






