குபேர அய்யன்மலை அய்யப்ப சுவாமி கோவிலில் நாளை விரதம் தொடங்கும் பக்தர்கள்

மண்டல விரதத்தை முன்னிட்டு அய்யப்ப சுவாமிக்கு தினமும் மூன்று கால பூஜை நடைபெறுகிறது.
கன்னியாகுமரி
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜைக்கு செல்லும் பக்தர்கள் கார்த்திகை மாதம் 1-ந் தேதி விரதத்தை தொடங்குவது வழக்கம். ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு சென்று வருகிறார்கள். அதன்படி இந்த ஆண்டு அய்யப்ப பக்தர்கள் நாளை விரதம் தொடங்குகிறார்கள்.
அதே சமயம் குமரி மாவட்டம் மயிலாடியை அடுத்த பொட்டல்குளம் பகுதியில் உள்ள குமரியின் சபரிமலையான குபேர அய்யன்மலை அய்யப்ப சாமி கோவிலிலும் அய்யப்ப பக்தர்கள் நாளை (திங்கட்கிழமை) மாலை அணிந்து விரதத்தை தொடங்குகிறார்கள். மண்டல விரதத்தை முன்னிட்டு தினமும் சாமிக்கு மூன்று கால பூஜை நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிறுவனர் தியாகராஜா சுவாமிகள், நிர்வாகிகள் அய்யப்பன், முத்தமிழ் செல்வன் மற்றும் பக்தர்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story






