திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருப்பு


திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் 24 மணி நேரம் காத்திருப்பு
x

திருப்பதி கோவிலில் நேற்று மட்டும் 88 ஆயிரத்து 257 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர்.

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த சில நாட்களாக பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது. குறிப்பாக, வார விடுமுறை தினங்களான நேற்றும், இன்றும் கட்டுக்கடங்காத அளவு பக்தர்கள் தரிசனத்திற்கு வருகின்றனர்.

திருப்பதியில் இருந்து திருமலைக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்கள் எண்ணிக்கையும் வெகுவாக அதிகரித்துள்ளது. மலை அடிவாரத்தில் உள்ள டோல்கேட்டை கடந்து செல்வதற்காக பக்தர்களின் கார்கள் உள்ளிட்ட வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்கின்றன.

இந்நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோவில் இலவச தரிசனத்திற்கு பக்தர்கள் 24 மணிநேரம் காத்திருக்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. பக்தர்கள் காத்திருப்பிற்காக உள்ள 31 அறைகளும் நிரம்பியுள்ளதால் 3 கிலோ மீட்டர் தொலைவிற்கு பக்தர்கள் காத்திருக்கின்றனர்.

திருப்பதி கோவிலில் நேற்று மட்டும் 88 ஆயிரத்து 257 பேர் சாமி தரிசனம் செய்துள்ளனர். நேற்று ஒரேநாளில் ரூ. 3.68 கோடி உண்டியல் காணிக்கை வசூல் ஆகியுள்ளது.

1 More update

Next Story