திருப்பதி கபிலேஸ்வரர் கோவிலில் ஹோம மகோத்சவம்
பஞ்சமூர்த்திக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் விபூதியால் சிறப்பு ஸ்னாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.
திருப்பதி கபிலேஸ்வர சுவாமி கோவிலில் ஒரு மாத காலம் நடைபெறும் ஹோம மகோத்சவம் தொடங்கியது. முதல் நாளான நேற்று கணபதி ஹோமம் நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது, காலையில் பஞ்சமூர்த்திக்கு பால், தயிர், தேன், சந்தனம் மற்றும் விபூதி கொண்டு சிறப்பு ஸ்னாபன திருமஞ்சனம் செய்யப்பட்டது.
மாலையில் கணபதி பூஜை, புண்யாஹவாசனம், வாஸ்து பூஜை, பர்யாக்னி கரணம், மிருதசங்கிரஹணம், அங்குரார்ப்பணம், கலசஸ்தாபனம், அக்னிபிரதிஷ்டை, கணபதி ஹோமம், லகு பூர்ணாஹுதி நடந்தது.
இரண்டாவது நாளான இன்றும் கணபதி ஹோமம் நடைபெற்றது. நாளை (அக்டோபர் 24) முதல் 26-ம் தேதி வரை ஸ்ரீ சுப்ரமணிய ஸ்வாமி ஹோமம் நடைபெறும்.
இந்நிகழ்வில் கோவில் துணை நிர்வாக அதிகாரி நாகரத்னா, கண்காணிப்பாளர் கே.பி.சந்திரசேகர், கோவில் ஆய்வாளர் ரவிக்குமார், அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story









