சாமந்தி மாலை அலங்காரத்தில் அருள்பாலித்த வல்லக்கோட்டை முருகன்


சாமந்தி மாலை அலங்காரத்தில் அருள்பாலித்த வல்லக்கோட்டை முருகன்
x

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முருகப்பெருமானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

காஞ்சிபுரம்

ஸ்ரீபெரும்புதுார் அருகே உள்ள வல்லக்கோட்டை முருகன் கோவிலில், ஏழு அடி உயரத்தில் வள்ளி, தெய்வானையுடன் முருகப்பெருமான் அருபாலிக்கிறார். இக்கோவிலில் விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அவ்வகையில் மார்கழி மாத செவ்வாய் கிழமையையொட்டி, இன்று காலை 5.00 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடந்தது. தொடர்ந்து, பலவித திரவியங்களால் மூலவர் முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் சிறப்பு மலர் அலங்காரங்கள் நடந்தன.

இதையடுத்து, காலை 6.00 மணிக்கு மயில் மண்டபத்தில் மார்கழி சிறப்பு யாகம் நடந்தது. இதனை தொடர்ந்து, சஷ்டி மண்டபத்தில் உற்சவருக்கு சாமந்தி, வெற்றிலை உள்ளிட்ட மாலைகள் அணிவித்து அலங்காரம் செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த முருகப்பெருமானை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சிறப்பு பூஜைக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் செந்தில்குமார், அறங்காவலர் குழு தலைவர் செந்தில் தேவ்ராஜ், அறங்காவலர்கள் விஜயகுமார், கலைச்செல்வி, மோகனகிருஷ்ணன், செல்வகுமரன் ஆகியோர் செய்திருந்தனர்.

1 More update

Next Story