சேவூர் சுற்றுவட்டார கோவில்களில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு

மொண்டிபாளையம்,ஸ்ரீதேவி பூதேவி சமேத வெங்கடேச பெருமாள்.
மார்கழி மாதம் பிறந்ததையடுத்து சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது.
சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் மார்கழி மாத சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நடுச்சிதம்பரம் என போற்றப்படும் சேவூரில் பிரசித்தி பெற்ற வாலீஸ்வரர் கோவில், ஸ்ரீதர்ம சாஸ்தா ஐயப்பன் கோவில், புற்று கண் மாரியம்மன் கோவில், மேலதிருப்பதி எனப்போற்றப்படும் மொண்டிபாளையம் வெங்கடேச பெருமாள் கோவில், தாளக்கரை லட்சுமி நரசிம்ம பெருமாள் கோவில், குட்டகம், கூலே கவுண்டன் புதூர் ஸ்ரீமொக்கணீஸ்வரர் கோவில் மற்றும் சேவூர் கல்யாண வெங்கட்ரமண பெருமாள் கோவில்,

அங்காளம்மன் கோவில், பத்ரகாளியம்மன் கோவில் உள்பட சேவூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கோவில்களில் அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டது. சுவாமிக்கு பால், தயிர், தேன், எலநீர், உள்ளிட்ட திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து சாமிக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை நடைபெற்றது.
சிவன் கோவில்களிலும், பெருமாள் கோவில்களிலும், தேவாரம், திருவாசகம் முற்றோதல் மற்றும் திருப்பாவையும், திருவெம்பாவையும் அடியார்கள் பாடி சுவாமியை வழிபட்டனர். இதையடுத்து மஹா தீபாராதனை முடிந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
மார்கழி மாத 30 நாட்களிலும் அதிகாலையில் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெறும்.






