வத்தலக்குண்டு அருகே புரவி எடுப்பு திருவிழா.. பைரவர் சிலையை சுமந்து வந்த இஸ்லாமியர்

சுவாமி சிலைகளுடன் கிராமத்தின் வீதிகள் வழியே வந்த ஊர்வலமாக வந்தபோது, திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
வத்தலக்குண்டு அருகே புரவி எடுப்பு திருவிழா.. பைரவர் சிலையை சுமந்து வந்த இஸ்லாமியர்
Published on

வத்தலக்குண்டு அருகே காவல் தெய்வங்களை வழிபடும் அய்யனார் கோவில் புரவி எடுப்பு திருவிழா, 200 ஆண்டுகளாக பாரம்பரியம் மாறாமல் நடைபெறுகிறது. 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை இத்திருவிழா நடைபெறும். அவ்வகையில் இந்த ஆண்டு புரவி எடுப்பு திருவிழா நடைபெற்றது.

திருவிழாவில் அய்யனார், கன்னிமார், சடையாண்டி, வேட்டைக்காரன், கருப்புசாமி மற்றும் குதிரை, யானை உள்ளிட்ட வாகனங்களின் மண் சிலைகள் அலங்கரிக்கப்பட்டு ஊர்வலமாக எடுத்துவரப்பட்டன. ஊர்வலத்தில் கிராம வழக்கப்படி இஸ்லாமிய சகோதரர் ஒருவர் கால பைரவர் சிலையை சுமந்து வந்தார்.

21 சிலைகளுடன் கிராமத்தின் பல்வேறு வீதிகள் வழியே வந்த இந்த ஊர்வலத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். பள்ளிவாசல் பகுதியில் ஊர்வலம் வந்தபோது இஸ்லாமியர்கள் பழங்களை கொடுத்து வரவேற்றனர். புரவி எடுப்பு திருவிழாவின் நிறைவில் சிலைகள் அனைத்தும் சோலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டன.

தங்கள் முன்னோர்கள் கற்றுத் தந்த பாரம்பரியம் மாறாமலும், கிராம மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதமாகவும், மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கிய இந்த திருவிழா மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com