குழந்தை பாக்கியம் வேண்டி புத்திரகாமேஷ்டி சிறப்பு யாகம்


தம்பதியருக்கு சங்கல்ப பூஜை செய்து மாலைகள் மாற்றப்பட்டு, சிவாச்சாரியார்கள் தலைமையில் யாக பூஜை நடைபெற்றது.

ஆரணி புதுக்காமூர் பகுதியில் குழந்தை வரும் அருளும் ஸ்ரீ பெரிய நாயகி சமேத ஸ்ரீ புத்திரகாமேட்டீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் பௌர்ணமி தினத்தில், குழந்தை வரம் வேண்டி புத்திரகாமேஷ்டி சிறப்பு யாக பூஜை நடைபெற்று வருகிறது. அவ்வகையில் 25ஆம் ஆண்டு புத்திரகாமேஷ்டி யாக பூஜை இன்று நடைபெற்றது.

யாக பூஜையின் துவக்கமாக காலையில் ஸ்ரீ கணபதி ஹோமம், ஸ்ரீ லட்சுமி ஹோமம், ஸ்ரீ நவக்கிரக ஹோமம் நடைபெற்றது. பின்னர் தம்பதியருக்கு சங்கல்ப பூஜை செய்து மாலைகள் மாற்றப்பட்டு, சிவாச்சாரியார்கள் தலைமையில் யாக பூஜை நடைபெற்றது.

தமிழகத்திலிருந்தும், பல்வேறு மாநிலங்களில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட தம்பதியர் இந்த யாக பூஜையில் பங்கேற்றனர். பூஜையில் பங்கேற்ற தம்பதியருக்கு கலசங்கள், பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

1 More update

Next Story