இந்த மாதம் திருச்சானூர் கோவில்களில் நடக்கும் சிறப்பு உற்சவங்கள்

திருச்சானூர் பலராம கிருஷ்ணர் கோவிலில் 5-ந்தேதி ருக்மினி, சத்யபாமா சமேத ஸ்ரீகிருஷ்ணர் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் மற்றும் துணைக் கோவில்களில் இந்த மாதம் (டிசம்பர்) நடக்கும் சிறப்பு உற்சவங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
பத்மாவதி தாயார் கோவில்
வருகிற 5, 12, 19 மற்றும் 26-ந்தேதிகளில் வரும் வெள்ளிக்கிழமைகளில் பத்மாவதி தாயாருக்கு ‘திருச்சி உற்சவம்' நடக்கிறது. 22-ந்தேதி உத்திராடம் நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 6.45 மணிக்கு உற்சவர் பத்மாவதி தாயார் கஜ வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 30-ந்தேதி வைகுண்ட ஏகாதசி விழா, 31-ந்தேதி வைகுண்ட துவாதசி விழா நடக்கிறது.
திருச்சானூரில் உள்ள பலராம கிருஷ்ணர் கோவிலில் 5-ந்தேதி ரோகிணி நட்சத்திரத்தை முன்னிட்டு ருக்மினி, சத்யபாமா சமேத ஸ்ரீகிருஷ்ணர் திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
சூரியநாராயண சுவாமி கோவில்
திருச்சானூர் சூரியநாராயண சுவாமி கோவிலில் 14-ந்தேதி அஸ்த நட்சத்திரத்தை முன்னிட்டு சூரியநாராயண சுவாமி திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
திருச்சானூர் சுந்தரராஜ சுவாமி கோவிலில் 7-ந்தேதி உத்திரட்டாதி நட்சத்திரத்தை முன்னிட்டு சுந்தரராஜசுவாமி திருச்சி வாகனத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.
திருச்சானூர் சீனிவாசசுவாமி கோவிலில் 6, 13, 20 மற்றும் 27-ந்தேதி வியாழக்கிழமைகளில் காலை 8 மணிக்கு மூலவர் சீனிவாசசுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.






