திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 2026-ல் நடக்கும் உற்சவங்கள்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி 15-ம் தேதி முதல் சுப்ரபாத சேவை மீண்டும் தொடங்குகிறது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு விழாக்கள் மற்றும் சிறப்பு உற்சவங்கள் நடக்கின்றன. இது குறித்த தகவல்களையும், அட்டவணைகளையும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களின் வசதிக்காக வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் அடுத்த மாதம் (ஜனவரி 2026) எந்தெந்த தேதிகளில் என்னென்ன உற்சவங்கள் நடைபெற உள்ளன என்பது தொடர்பான அட்டவணையை திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்:
ஜனவரி 4: திருமலையில் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் பிரணய கலஹோத்சவம்.
ஜனவரி 8: ஏழுமலையான் கோவிலில் பெரிய சாற்றுமுறை
ஜனவரி 12: ஏழுமலையான் கோவிலில் அத்யயன உற்சவம் நிறைவு.
ஜனவரி 13: ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி திருமலை நம்பி சந்நிதியில் எழுந்தருள்கிறார்
ஜனவரி 14: போகி பண்டிகை.
ஜனவரி 15: மகர சங்கராந்தி; சுப்ரபாத சேவை மீண்டும் தொடங்குகிறது
ஜனவரி 16: கனுமா விழா (அறுவடைத் திருவிழா), ஸ்ரீ வெங்கடேஸ்வர ஸ்வாமி பார்வேட்டை மண்டபத்தில் எழுந்தருள்கிறார்.
ஜனவரி 18: புரந்தர தாச ஆராதனை மஹோத்ஸவம்.
ஜனவரி 23: வசந்த பஞ்சமி.
ஜனவரி 25: ரத சப்தமி.
அடுத்த மாதம் திருப்பதி செல்ல திட்டமிட்டிருக்கும் பக்தர்கள், திருப்பதியில் நடைபெற உள்ள இந்த உற்சவங்கள் மற்றும் திருவிழாக்களை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப தங்களின் பயண திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம்.






