அக்டோபர் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் விழாக்கள்


அக்டோபர் மாதம் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடக்கும் விழாக்கள்
x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அக்டோபர் 7-ந்தேதி பௌர்ணமி கருடசேவை நடைபெறுகிறது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் அடுத்த மாதத்தில் (அக்டோபர் 2025) நடைபெற உள்ள சிறப்பு விழாக்கள் குறித்து திருமலை திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

அதன் விவரம் வருமாறு:-

அக்டோபர் 1-ந்தேதி (நாளை, செவ்வாய்க்கிழமை) பிரம்மோற்சவ விழா தேரோட்டம், 2-ந்தேதி சக்கர ஸ்நானம் எனப்படும் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நிகழ்ச்சி, இரவு வருடாந்திர பிரம்மோற்சவ விழா கொடியிறக்கம், 3-ந்தேதி பாக் சவாரி உற்சவம், 7-ந்தேதி பவுர்ணமி கருடசேவை, 15-ந்தேதி திருமலை நம்பி உற்சவம் தொடக்கம், 20-ந்தேதி தீபாவளி ஆஸ்தானம்.

23-ந்தேதி பகினீஹஸ்த போஜனம், 24-ந்தேதி திருமலைநம்பி சாத்துமுறை, 25-ந்தேதி நாகுல சதுர்த்தி, அதையொட்டி பெரிய சேஷ வாகன வீதிஉலா, 27-ந்தேதி மாணவாள மாமுனிகள் சாத்துமுறை, 28-ந்தேதி சேனை முதலியார் வருட திருநட்சத்திரம், 29-ந்தேதி மாலை புஷ்ப யாக மகோற்சவ அங்குரார்ப்பணம், 30-ந்தேதி புஷ்ப யாகம், 31-ந்தேதி பூதத்தாழ்வார் வருட திருநட்சத்திரம், யாஜ்ஞவல்க்ய ஜெயந்தி நடக்கிறது.

இவ்வாறு திருமலை திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

1 More update

Next Story