விருதுநகர் மீனாட்சி சமேத சொக்கநாத சுவாமி கோவிலில் தேரோட்டம்

விருதுநகரில் நடந்த தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.
விருதுநகரில் மிகவும் பழமை வாய்ந்த, மீனாட்சி சமேத சொக்கநாத சுவாமி கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆவணி பெருந்திருவிழா கடந்த மாதம் 27-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் சுவாமி மற்றும் அம்பாள் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாண வைபவம் நேற்று நடைபெற்றது. திருக்கல்யாண கோலத்தில் வீற்றிருந்த சுவாமி மற்றும் அம்பாளை திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்று நடைபெற்றது. தேரோட்டத்தை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வடம் பிடித்து தொடங்கி வைத்தார். இதில் சீனிவாசன் எம்எல்ஏ, நகர சபை தலைவர் மாதவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தேர், கோவிலில் இருந்து புறப்பட்டு மேல ரதவீதி, மெயின் பஜார், தெற்கு ரத வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தது. 6-ம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது.






