திருப்பதி: செப்டம்பர் மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு


திருப்பதி: செப்டம்பர் மாதத்திற்கான ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் வெளியீடு
x

புதன்கிழமை காலை 10 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.

திருமலை,

செப்டம்பர் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் நாளை (புதன்கிழமை) முதல் ஆன்லைனில் வெளியிடப்படுகின்றன. இதுகுறித்து திருப்பதி தேவஸ்தானம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

லக்கி டிப் டிக்கெட்டுகள்

திருப்பதி ஏழுமலையானை செப்டம்பர் மாதம் தரிசிக்க ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கீடு புதன்கிழமை காலை 10 மணிக்கு திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படுகின்றன.

இந்தச் சேவை டிக்கெட்டுகளின் எலக்ட்ரானிக் டிப் 20-ந்தேதி காலை 10 மணி வரை ஆன்லைனில் பதிவு செய்யலாம். இந்த டிக்கெட்டுகளை பெற்று 20 முதல் 22-ந்தேதி வரை மதியம் 12 மணிக்குள் பணம் செலுத்தியவர்களுக்கு லக்கி டிப்பில் டிக்கெட்டுகள் வழங்கப்படும்.

அங்கப்பிரதட்சண டோக்கன்கள்

கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோற்சவம், சஹஸ்ர தீப அலங்காரச் சேவைக்கான டிக்கெட்டுகள் 21-ந்தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.

உற்சவள் சேவைகளுக்கான ஒதுக்கீடு மற்றும் தரிசன ஸ்லாட்டுகள் 21-ந்தேதி மாலை 3 மணிக்கு தேவஸ்தான இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

23-ந்தேதி காலை 10 மணிக்கு அங்கப்பிரதட்சண டோக்கன்களின் ஒதுக்கீடு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

ஸ்ரீவாணி டிரஸ்ட் டிக்கெட்டுகளுக்கான ஆன்லைன் ஒதுக்கீடு 23-ந்தேதி காலை 11 மணிக்கு வெளியிடப்படுகிறது.

அறைகள் ஒதுக்கீடு

முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் அவதிப்படும் நோயாளிகள் சாமி தரிசனம் செய்ய 23-ந்தேதி மாலை 3 மணிக்கு இலவச தரிசன டோக்கன்கள் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

24-ந்தேதி காலை 10 மணிக்கு சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் (ரூ.300 கட்டண டிக்கெட்) ஒதுக்கீடு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

திருமலை மற்றும் திருப்பதியில் உள்ள தேவஸ்தான தங்கும் விடுதிகளில் அறைகள் ஒதுக்கீடு 24-ந்தேதி மாலை 3 மணிக்கு ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

ஸ்ரீவாரி சேவா

ஸ்ரீவாரி சேவா (திருமலை மற்றும் திருப்பதி), பரகாமணி சேவை, நவநீத சேவை மற்றும் குரூப் சூப்பர்வைசர்கள் சேவைகளுக்கான ஆகஸ்டு மாத ஒதுக்கீடு வருகிற 25-ந்தேதி மாலை 3 மணிக்கு வெளியிடப்படுகிறது.

ஸ்ரீவாரி ஆர்ஜித சேவை மற்றும் தரிசன டிக்கெட்டுகளை https://ttdevasthanams.ap.gov.in என்ற வெப்சைட் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

1 More update

Next Story