வல்லன்குமாரன்விளை சாலைக்கரை இசக்கியம்மன் கோவில் கொடை விழா

இன்று நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை மற்றும் அம்மன் காட்சி தரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
கன்னியாகுமரி
நாகர்கோவில் அருகே உள்ள வல்லன்குமாரன்விளை அம்மன் கோவில் கிழக்கு அருள்மிகு சாலைக்கரை இசக்கியம்மன் திருக்கோவில் கொடை விழா இன்று தொடங்கியது.
இன்று காலை 6 மணிக்கு இசைத்தட்டு, பகல் 12 மணிக்கு மலர் அபிஷேகம், 1 மணிக்கு தீபாராதனை அதனை தொடர்ந்து அன்ன பிரசாதம் வழங்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு இசைத்தட்டு, 6 மணிக்கு ஐயப்ப பக்தர்களின் பஜனையும், இரவு 7 மணிக்கு நையாண்டி மேளம், 9 மணிக்கு வில்லிசை, நள்ளிரவு 12 மணிக்கு அலங்கார தீபாராதனை மற்றும் அம்மன் காட்சி தருதலும் நடைபெறுகிறது.
நாளை 13-12-2025) காலை 6 மணிக்கு இசைத்தட்டு, 9 மணிக்கு வில்லிசை, பகல் 12 மணிக்கு அலங்கார தீபாராதனை அதனை தொடர்ந்து அம்மன் காட்சி தருதலும், மதியம் 1 மணிக்கு அன்னதானமும் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story






