உலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயின் , ஜெர்மனி அணிகளின் ஆட்டம் சமனில் முடிந்தது


உலகக்கோப்பை கால்பந்து: ஸ்பெயின் , ஜெர்மனி அணிகளின் ஆட்டம் சமனில் முடிந்தது
x

உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின், ஜெர்மனி அணிகளின் ஆட்டம் சமனில் முடிந்தது.

தோகா,

உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்றிரவு 'இ' பிரிவில் நடந்த ஆட்டத்தில் ஸ்பெயின் - ஜெர்மனி அணிகள் சந்தித்தன. ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகள் தோல்வியடைந்தன.

பின்னர் பரபரப்பாக தொடங்கிய இரண்டாவது பாதியின் 62-வது வினாடியில் ஸ்பெயின் வீரர் அல்வாரோ மொராடா தனது அணிக்கான முதல் கோலை அடித்து அசத்தினார். இதனால் ஆட்டம் ஸ்பெயின் அணிக்கு சாதகமாகி இருந்தது.

இந்த சூழலில் ஸ்பெயின் அணிக்கு பதிலடியாக ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் நிக்லாஸ் புல்க்ரக் கோல் அடித்து அசத்தினார். தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் இரு அணிகளும் மேற்கொண்டு கோல் ஏதும் அடிக்கவில்லை. இதன்மூலம் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் சமனில் முடிந்தது.

ஸ்பெயின் நான்கு புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது, தற்போது ஜப்பானுக்கு எதிரான இ பிரிவின் இறுதி ஆட்டத்தில் முன்னேறுவதற்கு சமநிலை மட்டுமே தேவைப்படுகிறது. ஸ்பெயின் அணி வெற்றி பெற்றால் நாக் அவுட் சுற்றின் முதல் இடத்தைப் பிடிக்கும்.

ஜப்பானுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் தோல்வியடைந்த ஜெர்மனி, ஒரு புள்ளியில் கடைசி இடத்தில் உள்ளது. வியாழன் அன்று கோஸ்டாரிகாவிற்கு எதிராக வெற்றி பெற வேண்டும், அதன் நம்பிக்கை ஜப்பான் தோல்வியை சார்ந்தது. ஜப்பான் டிரா செய்தால், அது கோல் வித்தியாசத்தில் அணிகளின் பட்டியல் கணக்கிடப்படும் என்று தெரிகிறது.


Next Story