ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம்: பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி


ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம்: பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி
x

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 4-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

தோகா,

கத்தாரில் நடந்து வரும் உலக கோப்பை கால்பந்து திருவிழாவின் 4-வது லீக் ஆட்டத்தில் பிரான்ஸ், ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆட்டத்தின் தொடக்கத்தில் 9-வது நிமிடத்தில் ஆஸ்திரேலிய வீரர் கிரெய்க் குட்வின் முதல் கோல் அடித்தார்.

இதையடுத்து பிரான்ஸ் வீரர்கள் ஆட்ரியன் ரேபியாட் மற்றும் ஆலிவர் கிரௌட் தலா ஒரு கோல் அடித்தனர். இதனால் முதல் பாதியில் பிரான்ஸ் 2-1 என முன்னிலை பெற்றது.

இரண்டாவது பாதியின் பிரான்ஸ் வீரர் கைலியன் மாப்பே ஒரு கோல் அடித்தார். மேலும் 71-வது நிமிடத்தில் ஆலிவர் கிளெய்ட் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார். இறுதியில் நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அனி 4-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.


Next Story