உலக கோப்பை கால்பந்து: அமெரிக்கா-வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 'டிரா'


உலக கோப்பை கால்பந்து: அமெரிக்கா-வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் டிரா
x

Image Courtesy: AFP

அமெரிக்கா-வேல்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் ‘டிரா’ ஆனது.

தோகா,

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலக கோப்பை கால்பந்து போட்டி 1930-ம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2018-ம் ஆண்டு ரஷியாவில் நடந்த போட்டியில் பிரான்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது.

இந்த நிலையில் உலகம் முழுவதும் உள்ள கால்பந்து ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கும் 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நேற்று கோலாகலமாக தொடங்கியது. இன்று நடைபெற்ற 3வது ஆட்டத்தில் அமெரிக்கா மற்றும் வேல்ஸ் அணிகள் மோதின.

இதில் தொடக்கத்திலேயே அபாரமாக ஆடிய அமெரிக்க அணி ஆட்டத்தின் முதல் பாதியிலேயே ( 36வது நிமிடம்) கோல் அடித்தது. அந்த அணியின் திமுதி வியா கோல் அடித்து அசத்தினார். இதையடுத்து முதல் பாதி ஆட்டத்தில் அமெரிக்க அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.

இதையடுத்து ஆட்டத்தின் 2 வது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சியில் ஈடுபட்டனர். ஆட்டத்தில் அமெரிக்கா வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை வேல்ஸ் வீரர் பாலே அபாரமாக வலைக்குள் அடித்தார். இதைய்டுத்து கோல் அடிக்க இரு அணி வீரர்களும் எடுத்த முயற்சி தோல்வியில் அடைந்தது. இறுதியில் ஆட்டம் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.


Next Story