நெஞ்சு சளியை போக்கும் ஆடாதோடை இலை கசாயம்

ஆடாதோடை இலை மட்டுமல்லாமல், பட்டை, வேர், பூக்கள் போன்ற அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை.
ஆடாதோடை இலை பார்ப்பதற்கு மாவிலை போலவே இருக்கும். இந்த இலைகளை ஆடுகள் சாப்பிடாது. ஆடு தொடாத இலை என்பதால்தான், `ஆடு தொடா இலை' என்று அழைக்கப்பட்டது. இது காலப்போக்கில் மருவி 'ஆடாதோடை' என்று ஆகிவிட்டது.
இந்த இலைகளை தண்ணீர்விடாமல் அரைத்து சாறு எடுத்து, அதனுடன் சம அளவு தேன் கலந்து குடிக்கலாம். அல்லது எட்டு முதல் பத்து ஆடாதோடை இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து, தண்ணீர் பாதியாக சுண்டும்வரை காய்ச்சி வடிகட்டி, உணவுக்கு முன் குடிக்கலாம். (குழந்தைகள் 10 மி.லி. அளவும், பெரியவர்கள் 30 மி.லி. அளவும் பருகலாம்).
இந்த கசாயம் நுரையீரலை பலப்படுத்தி, நுரையீரலில் தேங்கிய சளியை வெளியேற்ற உதவுகிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. பெண்களுக்கு கர்ப்பப்பையை வலுப்படுத்தவும், மாதவிடாய் கால அதிக உதிரப்போக்கைக் கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. உடலை வலுப்படுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.
இதன் இலை மட்டுமல்லாமல், பட்டை, வேர், பூக்கள் போன்ற அனைத்து பாகங்களுமே மருத்துவ குணம் வாய்ந்தவை. ஆடாதோடை இலைகள் சளி, இருமல், தொண்டை வலி, நெஞ்சில் கபம், ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளை குணமாக்க பயன்படுகிறது.






