தாம்பூலம் போடுவதால் இத்தனை நன்மைகளா..?

தாம்பூலம் போடுவதால் ஜீரண சக்தி அதிகரிக்கும், எலும்புகள் உறுதி பெறும், வாய் நாற்றம் போகும், மலச்சிக்கல் நீங்கும்.
தமிழ் கலாசாரத்தில் மிக முக்கிய பங்கு வகிப்பது "தாம்பூலம்" எனப்படும் வெற்றிலை, பாக்கு. தமிழர்களின் பிறப்பு முதல் இறப்பு வரை உள்ள அனைத்து சடங்கு, சம்பிரதாயங்களிலும் தவறாமல் இடம்பெறும் ஒரு பொருள் வெற்றிலை பாக்கு, வெறும் வெற்றிலை, பாக்கு மட்டுமே மாற்றி திருமணத்தையே நிச்சயம் செய்து விடுவது தமிழ் கலாசாரம்.
வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, ஏலக்காய், கிராம்பு, சாதிக்காய், என வாசனைப் பொருட்கள் கலந்து வாயில் இட்டு சுவைத்து, முதலில் ஊறும் நீரும், இரண்டாவது ஊறும் நீரையும் துப்பிவிட வேண்டும் என்றும், மூன்றாவதாய் ஊறும் நீர் அமிர்தம் என்றும் கூறுகிறது சித்த மருத்துவம். தாம்பூலம் போடுவதால் ஜீரண சக்தி அதிகரிக்கும், எலும்புகள் உறுதி பெறும், வாய் நாற்றம் போகும், மலச்சிக்கல் நீங்கும்.
ஆண்களுக்கான பிரச்சனைகளுக்கு குறிப்பாக விந்தணு உற்பத்தி நிகழ மற்றும் விந்தணு இயக்கம் குறைதல் போன்ற பிரச்சனைகளுக்கு தாம்பூலம் மிக சிறந்தது.
வெற்றிலையில் உள்ள "ஹைட்ராக்சி சாவிகோல்" எனும் பீனால் ஆனது ஆண்களின் புரோஸ்டேட்-ஐ வலுப்படுத்துகிறது, மேலும் புரோஸ்டேட் புற்று வராமல் தடுக்கும் ஆற்றல் கொண்டது.
விதைப்பையில் உற்பத்தியாகும் விந்தணுவிற்கு புரோஸ்டேட்-ல் இருந்து சுரக்கும் நீரில் உள்ள துத்தநாகம் மூலம் தான் உயிரே கிடைக்கிறது, அதாவது விந்தணுக்களின் இயக்கம் உண்டாகிறது, ஐ.வி.எப் நிகழ்வில் கூட விந்தணு, கருமுட்டை சேர்க்கை நிகழ்வு முக்கியம், இது நடைபெற புரோஸ்டேட் சுரப்பு இன்றியமையாதது.
மலச்சிக்கல் இருந்தால் தாம்பூலத்துடன், கொஞ்சம் பாக்கை அதிகம் சேர்க்க வேண்டும். வாய் நாற்றம் உள்ளவர்கள் கிராம்பு , ஏலக்காய் பயன்படுத்த வேண்டும். ஆண்களின் வீரிய சக்தி அதிகரிக்க இரவில் தாம்பூலத்துடன் சாதிக்காய் சேர்க்க வேண்டும். சுண்ணாம்பு இருப்பதால் எலும்புகள் உறுதியடையும்.