நள்ளிரவில் எழுந்து தண்ணீர் குடிப்பவரா நீங்கள்..? இதை கொஞ்சம் கவனிங்க..!

நள்ளிரவில் அடிக்கடி தாகம் எடுப்பதை தவிர்க்க பகலில் உடலில் நீர்ச்சத்தை போதுமான அளவு தக்கவைப்பது அவசியம்.
நள்ளிரவில் எழுந்து தண்ணீர் குடிப்பவரா நீங்கள்..? இதை கொஞ்சம் கவனிங்க..!
Published on

நள்ளிரவில் தூக்கத்தில் இருந்து தாகத்தோடு சிலர் எழுவதுண்டு. நாவறட்சியை போக்குவதற்கு தண்ணீர் அருந்தவும் செய்வார்கள். அப்படி நள்ளிரவு நேரத்தில் தண்ணீர் குடிப்பது நல்லதா? என்ற கேள்விக்கு நல்லதல்ல என்பதே மருத்துவ நிபுணர்களின் பதிலாக இருக்கிறது.

அப்படி தாகமாக எழுந்தால் உடல் நீரிழப்புக்கு ஆளாகி இருப்பதாக அர்த்தம். தாகத்தை போக்கவும், நீரிழப்பை தடுக்கவும் சிறிதளவு தண்ணீர் பருகலாம். ஆனால் அதிகம் பருகக்கூடாது. அது தூக்கத்தை சீர்குலைத்துவிடும். மீண்டும் சிறுநீர் கழிக்க எழுந்திருக்க நேரிடும். ஆழ்ந்த தூக்கத்தையும், நோய் எதிர்ப்பு அமைப்பையும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் எதிர்மறையாக பாதிக்கும்.

அதேவேளையில் உடல் தூக்கத்தின்போது உடல் பாகங்களை பழுதுபார்க்கும் பணியை செய்யும். இந்த செயல்முறைகளுக்கு தண்ணீர் மிக முக்கியமானது. அதனால் தூங்க செல்வதற்கு சுமார் இரண்டு மணி நேரத்திற்கு முன்பு ஒரு டம்ளர் தண்ணீர் பருகலாம். நள்ளிரவில் அடிக்கடி தாகம் எடுப்பதை தவிர்க்க பகலில் உடலில் நீர்ச்சத்தை போதுமான அளவு தக்கவைப்பது அவசியம்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com