மாதவிடாய் கால வயிற்று வலியை போக்கும் சித்த மருந்துகள்


மாதவிடாய் கால வயிற்று வலியை போக்கும் சித்த மருந்துகள்
x

புதினா இலையின் சாறு, எலுமிச்சை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வர மாதவிடாய் வயிற்று வலி நீங்கும்.

மாதவிடாய் காலங்களில் காணப்படும் வயிற்றுவலி, மற்றும், வாந்தி, முதுகுவலி இவற்றை "டிஸ்மெனோரியா" என்று அழைக்கிறோம்.

காரணங்கள்:

1. கருப்பை இயற்கையாகவே பலவீனமாக இருத்தல் .

2. கருப்பையின் சளிக்கவசத்தில் ஏற்படும் மாறுபாடுகள் மற்றும் கருப்பை சளிக்கவசம் துண்டு துண்டாக வெளியேறுதல் .

3. பருத்த கருப்பை

4. கருப்பை மற்றும் கருப்பை உள் உறுப்புகளில் ஏற்படும் நோய்நிலைகள்

5. கருப்பையில் வளரும் சாதாரண கட்டிகள்

6. கருப்பை கழுந்து குறுகி காணல்

7. கருப்பை சளிக் கவசம்,வேறு இடங்களில் வளர்ச்சி அடைவது போன்ற பல காரணங்களால் மாதவிடாய் கால வயிற்றுவலி உண்டாகின்றது.

சித்த மருத்துவத் தீர்வுகள்

1. புதினா இலையின் சாறு, எலுமிச்சை சாறு எடுத்து அதனுடன் தேன் கலந்து குடித்து வர மாதவிடாய் வயிற்று வலி நீங்கும்.

2. திரிகடுகு, ஓமம், இந்துப்பு, கழற்சி பருப்பு, பெருங்காயம் இவற்றை சமஅளவு எடுத்து வறுத்து பொடித்து 500 மிகி-1 கிராம் நல்லெண்ணெயில் கலந்து கொடுக்க வலி தீரும்.

3. குன்ம குடோரி மெழுகு - 500 மிகி வீதம் காலை இரவு கொடுக்க வேண்டும்.

4. குமரி இலேகியம் -காலை, இரவு ஒரு டீஸ்பூன் வீதம் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும்.

5. கருப்பையை வலுப்படுத்த, உணவில் உளுந்தங்களி, வெந்தயக்களி, அத்திப்பழம், மாதுளம்பழம், வெண்பூசணி சாறு, சிவப்பு கொண்டைக்கடலை, நாட்டுக் கோழி முட்டை, நல்லெண்ணெய் இவைகளை சேர்த்துக்கொள்ள வேண்டும்.


Next Story