ஜம்மு காஷ்மீர்: கவர்னர் - முதல் மந்திரி உமர் அப்துல்லா இடையே மோதல் போக்கு


ஜம்மு காஷ்மீர்: கவர்னர் - முதல் மந்திரி உமர் அப்துல்லா இடையே மோதல் போக்கு
x
தினத்தந்தி 31 Oct 2024 7:23 PM (Updated: 1 Nov 2024 5:00 AM)
t-max-icont-min-icon

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக உருவான தின விழா நிகழ்வை உமர் அப்துல்லா புறக்கணித்ததற்கு துணைநிலை கவர்னர் அதிருப்தி தெரிவித்தார். இதனால் முதல்வர் - துணை நிலை கவர்னர் மோதல் துவங்கியுள்ளது

ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதன் 5-ம் ஆண்டு தின விழா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் உமர் அப்துல்லா மற்றும் ஆளும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்காமல் புறக்கணித்தனர்.

இதனால் அதிருப்தி அடைந்த துணை நிலை கவர்னர் கூறியது, தற்போதுவரை ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் தான் அதனை கொண்டாடுவதை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். மாநிலமாக மாறினால் அந்த நாளையும் கொண்டாடுவோம்.யூனியன் பிரதேச முதல்வராக பதவியேற்று கொண்டு, அதன் உருவான தினத்தை முதல்வர் ஒமர் அப்துல்லா புறக்கணித்தது. அரசியல் சாசனத்திற்கு எதிராக இரட்டை தன்மை பிரதிபலிப்பதாக உள்ளது என விமர்சித்து பேசினார்.

மாநில அந்தஸ்து கோரி அதற்கான முயற்சியை முன்னெடுத்து பிரதமர் மோடி, அமித்ஷாவை சந்தித்து வலியுறுத்தி வரும் உமர் அப்துல்லா, யூனியன் பிரதேச தினவிழாவில் பங்கேற்காமல் புறக்கணித்து வருவதன் மூலம், ஜம்மு-காஷ்மீரில் முதல் மந்திரி - துணை நிலை கவர்னர் மோதல் துவங்கியுள்ளது.

1 More update

Next Story