கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்....! அடுத்த முதல் மந்திரி யார்...? பூசலை தடுக்க கட்சியின் அடடே ஐடியா...!


கர்நாடகாவில் ஆட்சி அமைக்கும் காங்கிரஸ்....! அடுத்த முதல் மந்திரி யார்...? பூசலை தடுக்க கட்சியின் அடடே ஐடியா...!
x
தினத்தந்தி 13 May 2023 8:35 AM GMT (Updated: 13 May 2023 9:08 AM GMT)

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே, அடுத்த முதல் மந்திரி யார் என்பது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

பெங்களூரு :

கர்நாடகா சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை பரபரப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 134 இடங்களிலும், பாஜக 64 இடங்களிலும், மஜத 22 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.காங்கிரஸ் தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

2018 இன் முடிவு என்ன..?

2018ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 104 இடங்களில் வெற்றி பெற்று மிகப்பெரிய கட்சியாக உருவெடுத்தது, ஆனால் பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ் 80 இடங்களிலும்,மதசார்பற்ற ஜனதா தளம் 37 இடங்களிலும் வெற்றி பெற்றது. பின்னர் காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்த அரசு ஓராண்டே ஆட்சி செய்தது. கட்சி மாறிய 17 எம்.எல்.ஏ.க்கள் பா.ஜ.க.வுடன் கைகோர்த்து பாஜக ஆட்சி அமைத்தது.

கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் வெளியாகும் முன்பே, அடுத்த முதல் மந்திரி யார் என்பது குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. காங்கிரஸ் மிகப்பெரிய பெருமான்மை பெரும்என அனைத்து கருத்து கணிப்புகளும் கூறியுள்ள நிலையில், காங்கிரஸ் ஆட்சி அமைந்தால், அடுத்த முதல் மந்திரி யார் என்ற ஆவல் எழுந்துள்ளது.

முதல் மந்திரி வேட்பாளரை அறிவிக்காமல் காங்கிரஸ் தேர்தலை சந்தித்தது. தேர்தலுக்கு முந்தைய மற்றும் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளில்

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு பதிலளித்தார்.கர்நாடகாவின் அடுத்த முதல் மந்திரி யார் என்பதை கட்சி மேலிட பொறுப்பாளர்கள் பெங்களூருவுக்கு வருகை தந்து தேர்வு செய்வார்கள். என்று கூறினார்.

தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்பே காங்கிரசில் முதல் மந்திரி பதவிக்கான போட்டி துவங்கியுள்ளது. முதல் மந்திரி போட்டியில் தான் இருப்பதாகவும் பரமேஷ்வர் தெரிவித்துள்ளார். மறுபுறம், பிரியங்க் கார்கே அடுத்த முதல் மந்திரி என்று சமூக வலைதளங்களில் போஸ்டர்கள் உலா வருகின்றன.

முதல் மந்திரி பதவிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர்கள் சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

அடுத்த முதல் மந்திரி டிகே சிவக்குமார் என டுவிட்டரில் ஒரு ஹேஸ்டேக் டிரன்ஆகி வருகிறது.அவரும் முதல் மந்திரி பதவிக்கு ஆசைப்படுகிறார்.

சித்தராமையா மாநிலத்தில் மிகவும் பிரபலமானவர். அவருக்கு முதல் மந்திரி பதவி வழங்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றர். இருப்பினும் கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர பெரும் முயற்சிகளை மேற்கொண்டுள்ள டி.கே.சிவக்குமாருக்கு முதல் மந்திரி பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.

முதல் மந்திரி பந்தயத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சித்தராமையா முன்னணியில் இருப்பதால், காங்கிரஸ் கட்சி உருவானால் யாருக்கு முதல்வர் பதவி என்பது குறித்து தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஐந்தாண்டு ஆட்சியில் சித்தராமையாவுக்கு இரண்டரை ஆண்டுகளும், டி.கே.சிவக்குமாருக்கு இரண்டரை ஆண்டுகளும் வழங்க வேண்டும் என தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

இருந்தாலும் ஆட்சி அமைக்க போதுமான பெரும்பான்மை கிடைத்தாலும், சித்தராமையா அல்லது டி.கே.சிவக்குமார் முதல் மந்திரியாக வருவதற்கான வாய்ப்புகள் குறைவு என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த விவகாரத்தில், காங்கிரஸ் மேலிட சிந்தனையே வேறு. இந்த இரு தலைவர்களும் முதல்-மந்திரி பதவிக்கு போட்டியிட்டால் கட்சி இரு அணிகளாக பிளவுபட வாய்ப்புள்ளது. அப்போது இந்தச் சூழலை பாஜக பயன்படுத்திக் கொண்டு காங்கிரசின் எம்.எல்.ஏக்களை பேரம் பேச வாய்ப்புகள் அதிகம்.

முதல் மந்திரி தேர்வு முடிவை கட்சியின் மேலிடத்திற்கு விட்டு விட்டு ஒருவருக்கொருவர் போட்டியைத் தவிர்க்க டெல்லி தலைவர்கள் பரிந்துரைக்கும் வேட்பாளரை ஆதரிக்க கேட்டு கொள்ளபடுவார்கள்.

சட்டசபை தேர்தலில் அறுதிப்பெரும்பான்மை பெற்றதையடுத்து, பதவியேற்பு விழா நிகழ்ச்சிக்கு காங்கிரஸ் பலத்த ஏற்பாடுகளை செய்துள்ளது. பல முக்கியஸ்தர்கள் முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்ய ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

போலீஸ் அதிகாரிகளுக்கு ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டது. காங்கிரஸ் முகாமிலும் ஆட்சி அமைக்கும் பணி தொடங்கியுள்ளது.

ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி, சோனியா காந்தி, பதவியேற்பு நிகழ்வில் தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவ், தேஜஸ்வி யாதவ், சரத்பவார், உத்தவ் தாக்கரே, பூபேஷ் பாகேல் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.


Next Story