பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் விழுந்தது: 3 ராணுவ வீரர்கள் பலி;15 பேர் காயம்


பள்ளத்தாக்கில் ராணுவ வாகனம் விழுந்தது: 3 ராணுவ வீரர்கள் பலி;15 பேர் காயம்
x
தினத்தந்தி 7 Aug 2025 11:47 AM IST (Updated: 7 Aug 2025 2:00 PM IST)
t-max-icont-min-icon

மலைப்பாதையில் சென்ற ராணுவ வீரர்களின் வாகனம், பள்ளத்தாக்கில் விழுந்து நொறுங்கியுள்ளது.

ஜம்மு,

ஜம்மு காஷ்மிரின் உதம்பூர் மாவட்டத்தில் மத்திய போலீஸ் படை ( சி.ஆர்.பி.எப்.,) வீரர்களை ஏற்றிக் கொண்டு ராணுவ வாகனம் மலைப்பாதையில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென வாகனம் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் இருந்த பள்ளத்தாக்கில் கவிழந்து விழுந்தது. இந்த வாகனம் 187வது பட்டாலியனுக்கு சொந்தமானது. ஆகும்.

இந்த விபத்தில் சி.ஆர்.பி.எப்., வீரர்கள் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயம் அடைந்தனர். இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். கட்வா பகுதியில் ராணுவ நடவடிக்கையை முடித்து விட்டு திரும்பி கொண்டிருந்த போது இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. விபத்தில் ராணுவ வீரர்கள் 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

1 More update

Next Story