நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு


நீட் நுழைவுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியீடு
x

FILEPIC

தினத்தந்தி 30 April 2025 3:57 PM IST (Updated: 30 April 2025 4:21 PM IST)
t-max-icont-min-icon

வரும் மே 4-ம் தேதி இளங்கலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.

சென்னை,

நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில், எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஹோமியோபதி உள்ளிட்ட மருத்துவ படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.

நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டு தோறும் ஒரு முறை நடத்தி வருகிறது. அதன்படி, 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வு வரும் மே 4-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது. தமிழகத்தில் சுமார் ஒன்றரை லட்சம் மாணவர்கள் நீட் தேர்வு எழுதவுள்ளனர். பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களும் இந்த தேர்வில் பங்கேற்கவுள்ளனர்.

இந்தநிலையில், 2025-26-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தேர்வுக்கான நுழைவுச்சீட்டு இணையளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மே 4-ம் தேதி நீட் நுழைவுத்தேர்வு நடைபெற உள்ள நிலையில் நுழைவுச்சீட்டு வெளியாகி உள்ளது. தேர்வர்கள் neet.nta.nic.in என்ற இணையதளத்தில் பதவிறக்கம் செய்து கொள்ளலாம். நீட் தேர்வு தொடர்பான சந்தேகங்களுக்கு 011-40759000 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

1 More update

Next Story