காஷ்மீரில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்?


காஷ்மீரில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்?
x
தினத்தந்தி 12 May 2025 9:33 PM IST (Updated: 13 May 2025 6:45 AM IST)
t-max-icont-min-icon

பாகிஸ்தானில் இருந்து பறந்து வந்த டிரோன்களை இந்திய ராணுவம் இடைமறித்து அழித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

ஜம்மு,

ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தானின் டிரோன்கள் மீண்டும் அத்துமீறியதாக ஏ.என்.ஐ. தகவல் தெரிவித்துள்ளது. காஷ்மீரின் சம்பா பகுதியில் டிரோன்களை இந்தியா இடைமறித்தபோது வெடிசத்தம் கேட்டதாக ஏ.என்.ஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திரமோடி உரை நிகழ்த்தி முடித்த நிலையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறி தாக்கி உள்ளது.

பாகிஸ்தானின் டிரோன்கள் மீண்டும் அத்துமீறியதை தொடர்ந்து பஞ்சாப்பின் அமிர்தசரஸ் பகுதியிலும் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. காஷ்மீரின் சம்பா, கதுவா, வைஷ்ணவோதேவி வட்டாரத்தில் மின் வினியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் டிரோன்களை இந்திய வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தியுள்ளது.

தாக்குதல் நிறுத்தத்தை மீறி மீண்டும் டிரோன்களை பாகிஸ்தான் ஏவியதாக தகவல் வெளியாகி உள்ளது. இரு நாடுகளின் ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான இன்றைய பேச்சுவார்த்தையில் தாக்குதலை முற்றிலும் நிறுத்த ஒப்புதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது


1 More update

Next Story