அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை.. மீண்டும் சவரனுக்கு ரூ.95 ஆயிரத்தை தாண்டியது

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

சென்னை,

தங்கம் விலை கடந்த சில நாட்களுக்கு முன்பு உச்சத்தை தொட்டது. இதன்படி கடந்த மாதம் (அக்டோபர்) 17-ந்தேதி புதிய உச்சத்தை தொட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. பின்னர் விலை குறையத் தொடங்கியது. இதனைத்தொடர்ந்து விலை ஏற்ற-இறக்கத்துடனேயே இருந்து வந்தது. இந்த சூழலில் கடந்த 26-ந் தேதி வரை உயர்ந்து வந்த நிலையில், நேற்று முன்தினம் சற்று குறைந்து காணப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை நேற்று விலை மீண்டும் அதிகரித்தது.

அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 770-க்கும், ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்து 160-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 840-க்கும், ஒரு சவரன் ரூ.94 ஆயிரத்து 720-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையும் நேற்று உயர்ந்திருந்தது. கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.183-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 83 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது.

தங்கம் விலை

இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.140-ம், சவரனுக்கு ரூ.1,120-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,980-க்கும், சவரன் ரூ.95,840-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.9-ம், கிலோவுக்கு ரூ.9 ஆயிரமும் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.192-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 92 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

29.11.2025 ஒரு சவரன் ரூ.95,840 (இன்று)

28.11.2025 ஒரு சவரன் ரூ.94,720 (நேற்று)

27.11.2025 ஒரு சவரன் ரூ.94,160

26.11.2025 ஒரு சவரன் ரூ.94,400

25.11.2025 ஒரு சவரன் ரூ.93,760

24.11.2025 ஒரு சவரன் ரூ.92,160

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com