மீண்டும் உச்சத்தை நோக்கி செல்லும் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை சவரனுக்கு நேற்று ரூ.1,440 அதிகரித்து, ஒரு சவரன் ரூ. 91 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
சென்னை,
தீபாவளி பண்டிகைக்கு முன்பு ஜெட் வேகத்தில் சென்ற தங்கம் விலை படிப்படியாக குறையத்தொடங்கியது. இது சுப நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தவர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்தது. அதேநேரத்தில் இன்னும் விலை உயர்ந்துகொண்டே செல்லும் என்று நினைத்து தங்கத்தின் மீது முதலீடு செய்தவர்களுக்கு அதிர்ச்சியை தந்தது.
இந்தநிலையில், நேற்று முன்தினம் தங்கம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 300-க்கும், சவரன் ரூ.90 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது. இதற்கிடையே நேற்று ரூ.180 அதிகரித்து கிராம் ரூ.11 ஆயிரத்து 480-க்கும், ரூ.1,440 அதிகரித்து சவரன் ரூ.91 ஆயிரத்து 840-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
தங்கத்தை போன்று வெள்ளி விலையும் உயர்ந்தது. நேற்று முன்தினம் வெள்ளி ஒரு கிராம் ரூ.165-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 65 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது. நேற்று ரூ.4 அதிகரித்து வெள்ளி ஒரு கிராம் ரூ.169-க்கும், ரூ.4 ஆயிரம் அதிகரித்து கிலோ ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்நிலையில் இன்றும் தங்கம் விலை அதிகரித்து உச்சத்தை நோக்கி பயணிக்க தொடங்கி உள்ளது. இதன்படி சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ரூ.220 அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 700-க்கும், ரூ.1,760 அதிகரித்து ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் இன்று சற்று அதிகரித்துள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 உயர்ந்து ஒரு கிராம் ரூ.170 க்கும், ஒரு கிலோ ரூ. 1 லட்சத்து 70 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடந்த சில நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-
11.11.2025 ஒரு சவரன் ரூ.93,600 (இன்று)
10.11.2025 ஒரு சவரன் ரூ.91,840 (நேற்று)
09.11.2025 ஒரு சவரன் ரூ.90,400
08.11.2025 ஒரு சவரன் ரூ.90,400
07.11.2025 ஒரு சவரன் ரூ.90,160
06.11.2025 ஒரு சவரன் ரூ.90,560






