மளமளவென உயரும் தங்கம் விலை; இன்று மாலை நிலவரம் என்ன?

தங்கம் விலை இன்று 2-வது முறையாக உயர்ந்துள்ளது.
சென்னை,
அமெரிக்காவின் வர்த்தக போரால் அந்நாட்டு டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்துவருகிறது. இதனால் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது கணிசமாக குறைந்து, தங்கத்தின் மீதான முதலீட்டை அதிகரித்துள்ளது. இதனால் தங்கத்தின் விலை நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக காலை, மாலை என மாறி மாறி மளமளவென உயர்ந்து வருகிறது.
இந்த நிலையில் சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கம் விலை மேலும் ரூ.680 உயர்ந்து சவரன் 91,080 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது. சென்னையில் ஆபரணத்தங்கம் விலை கிராம் மேலும் ரூ.85 உயர்ந்து ரூ.11,385க்கு விற்பனை செய்யப்படுகிறது. காலையில் சவரனுக்கு 800 ரூபாயும் தற்போது மேலும் 680 ரூபாய் உயர்ந்து ரூ.91.080க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை இன்று 2-வது முறையாக உயர்ந்துள்ளது. சவரனுக்கு ரூ.1,480 ரூபாய் அதிகரித்துள்ளது. சென்னையில் வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.3 உயர்ந்து ரூ.170க்கு விற்பனை செய்யப்படுகிறது.






