திடீர் உயர்வில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?

தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்து, ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.
திடீர் உயர்வில் தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?
Published on

சென்னை,

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 18-ந்தேதி குறைந்து, 19-ந்தேதி உயர்ந்த நிலையில், நேற்று முன்தினம் விலை சரிந்திருந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11 ஆயிரத்து 460-க்கும், ஒரு சவரன் ரூ.91 ஆயிரத்து 680-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.92 ஆயிரத்துக்கு கீழ் வந்தது.

வெள்ளி விலையும் மளமளவென சரிந்து வந்தது. அதன்படி, நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3 ஆயிரமும் குறைந்தது. நேற்றும் கிராமுக்கு ரூ.4-ம், கிலோவுக்கு ரூ.4 ஆயிரமும் குறைந்து, ஒரு கிராம் ரூ.169-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 69 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கம் விலை

இந்நிலையில் இன்று தங்கம் விலை திடீர் உயர்வை சந்தித்துள்ளது. அதன்படி கிராமுக்கு ரூ.170-ம், சவரனுக்கு ரூ.1,360-ம் உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.11,630-க்கும், ஒரு சவரன் ரூ.93,040-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை

வெள்ளி விலையை பொறுத்தவரையில், கிராமுக்கு ரூ. 3 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.172-க்கும். ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 72 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

22.11.2025 ஒரு சவரன் ரூ.93,040 (இன்று)

21.11.2025 ஒரு சவரன் ரூ.91,680 (நேற்று)

20.11.2025 ஒரு சவரன் ரூ.92,000

19.11.2025 ஒரு சவரன் ரூ.92,800

18.11.2025 ஒரு சவரன் ரூ.91,200

17.11.2025 ஒரு சவரன் ரூ.92,320   

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com