மீண்டும் ஏற்றத்தில் தங்கம் விலை.. வரலாறு காணாத உயர்வை எட்டிய வெள்ளி விலை


மீண்டும் ஏற்றத்தில் தங்கம் விலை.. வரலாறு காணாத உயர்வை எட்டிய வெள்ளி விலை
x

சில தினங்களாக தங்கம் விலை குறைந்து வந்தது இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதலை கொடுத்திருந்தது.

சென்னை,

சென்னையில் கடந்த ஆண்டு இறுதியில் ஒரு சவரன் தங்கம் ரூ.59 ஆயிரத்துக்கு விற்கப்பட்டது. அதன் பின்னர் தங்கம் விலை தாறுமாறாக ஏறியது. வரலாறு காணாத வகையில் கடந்த 9 மாதங்களில் சவரனுக்கு ரூ.21 ஆயிரம் அதிகரித்து, கடந்த 6-ந்தேதி அன்று ஒரு சவரன் தங்கம் ரூ.80 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. தங்கம் விலை விரைவில் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தொட்டு விடக் கூடும் என்று வியாபாரிகள் கருதி வரும் வேளையில், அதற்கு ஏற்ப தங்கம் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வருகிறது.

இதனிடையே தங்கம் விலை கடந்த 23-ந்தேதி வரை கிடுகிடுவென உயர்ந்து வந்தது. அன்றைய தினம் ஒரு சவரன் ரூ.85 ஆயிரத்து 120 என்ற வரலாறு காணாத உச்சத்தில் விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில் நேற்று முன்தினம் விலை சற்று குறைந்திருந்தது. கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்தது. இதன் தொடர்ச்சியாக நேற்றும் தங்கம் விலை சரிந்து இருந்தது.

அதன்படி நேற்றுமுன்தினம் ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 600-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி கிராமுக்கு ரூ.90-ம், சவரனுக்கு ரூ.720-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 510-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 80-க்கும் விற்பனையானது. விலை உயர்ந்து, தற்போது குறைந்து வருவது இல்லத்தரசிகளுக்கு சற்று ஆறுதலை கொடுத்திருந்தது.

இந்நிலையில் இன்று தங்கம் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி தங்கம் விலை கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.10 ஆயிரத்து 550-க்கும், ஒரு சவரன் ரூ.84 ஆயிரத்து 400-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை மீண்டும் உயர்ந்துள்ளநிலையில், வெள்ளி விலை இன்று வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ளது. இதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.153-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 53 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த 5 நாட்களில் தங்கம் விலை நிலவரம்:-

26.09.2025 ஒரு சவரன் ரூ.84,400 (இன்று)

25.09.2025 ஒரு சவரன் ரூ.84,080 (நேற்று)

24.09.2025 ஒரு சவரன் ரூ.84,800

23.09.2025 ஒரு சவரன் ரூ.85,120

22.09.2025 ஒரு சவரன் ரூ.83,440

21.09.2025 ஒரு சவரன் ரூ.82,320

1 More update

Next Story