காலையில் உயர்ந்து மாலையில் சரிந்த தங்கம் விலை


காலையில் உயர்ந்து மாலையில் சரிந்த தங்கம் விலை
x
தினத்தந்தி 24 Oct 2025 4:27 PM IST (Updated: 24 Oct 2025 5:29 PM IST)
t-max-icont-min-icon

தங்கம் விலை காலையில் சவரனுக்கு ரூ.320 அதிகரித்த நிலையில் மாலையில் குறைந்துள்ளது.

சென்னை,

தங்கத்தின் விலை இம்மாத தொடக்கத்தில் இருந்து வரலாறு காணாத வகையில் உயர்ந்து கடந்த 17-ந்தேதி கிராம் ரூ.12,200-க்கும், பவுன் ரூ. 97,600-க்கும் விற்பனை ஆனது. இதனால் புதிய உச்சத்தை தொட்ட தங்கத்தின் ஆனது. இதனால் விலை பின்னர் அதிரடியாக சரிந்து நேற்று கிராம் ரூ. 11,500-க்கும், பவுன் ரூ. 92 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

சில நாட்களாக குறைந்து வந்த தங்கம் விலை இன்று காலையில் மீண்டும் உயர்ந்துள்ளது. கிராம் 40 ரூபாய் அதிகரித்து ரூ. 11,540-க்கும், பவுன் ரூ. 320 உயர்ந்து ரூ.92,320-க்கும் விற்பனை ஆனது. தங்கத்துக்கு போட்டியாக தொடர்ந்து அதிகரித்து வந்த வெள்ளி விலை கிலோ ரூ.2 லட்சத்தை தாண்டி அதிர்ச்சி அளித்தது. அதன் பிறகு வேகமாக சரிந்து வரும் வெள்ளி விலை நேற்று கிராம் ரூ. 174-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 74-க்கும் விற்பனை ஆனது. இன்று காலையில் கிராம் 3 ரூபாய் குறைந்து ரூ.171-க்கும், கிலோ ரூ.3 ஆயிரம் குறைந்து ரூ 1 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் விற்கப்பட்டது.

இந்த நிலையில், காலையில் உயர்ந்த தங்கம் விலை மாலையில் சவரனுக்கு ரூ.1120 குறைந்து ரூ.92,200 க்கும், கிராமுக்கு ரூ.140 குறைந்து ரூ.11,400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலை காலை 3 ரூபாய் குறைந்த நிலையில், மாலையில் மேலும் 1 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.170-க்கும், கிலோ ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்கப்படுகிறது.

1 More update

Next Story