தங்கம் விலை உயர்வு... இன்றைய நிலவரம் என்ன..?

கோப்புப்படம்
தங்கம் விலை நேற்று சவரனுக்கு ரூ.320 குறைந்த நிலையில் இன்று உயர்ந்துள்ளது.
தொடர்ந்து உச்சத்தில் இருந்து அனைத்து தரப்பு மக்களையும் விழிபிதுங்க வைத்த தங்கம் விலை, நேற்று முன்தினம் அதிரடியாக குறைந்தது. அன்றைய நாளில் மட்டும் கிராமுக்கு ரூ.460-ம், சவரனுக்கு ரூ.3,680-ம் சரிந்தது. எப்படி விலை ஏற்றம் கண்டதோ, அதே வேகத்தில் சரிந்து விற்பனை ஆனது.
இதன் தொடர்ச்சியாக நேற்று மேலும் தங்கம் விலை குறைந்தது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.40-ம், சவரனுக்கு ரூ.320-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.11,500-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்பனை ஆனது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை சற்று உயர்ந்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ஒரு சவரன் ரூ.92,320-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,540-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலை நேற்றும் கிராமுக்கு ரூ.1-ம், கிலோவுக்கு ரூ.1,000-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.174-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 74 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று மேலும் குறைந்துள்ளது. அதன்படி வெள்ளி விலை கிராமுக்கு ரூ.3-ம், கிலோவுக்கு ரூ.3,000-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.171-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 71 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.






