தங்கம் விலை குறைந்தது... இன்றைய நிலவரம் என்ன..?

கோப்புப்படம்
நேற்று முன்தினம் தங்கம் விலை சவரனுக்கு ரூ.800 அதிகரித்த நிலையில் இன்று குறைந்துள்ளது.
தங்கம் விலை இம்மாதம் தொடக்கத்தில் இருந்து ராக்கெட் வேகத்தில் எகிறி வந்தது. கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.97,600 என்ற இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியது. மேலும் விலை அதிகரித்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டும் என்று சொல்லப்பட்ட நிலையில், கடந்த 18-ந்தேதியில் இருந்து விலை சரியத் தொடங்கியது.
அதனைத்தொடர்ந்து கடந்த 22-ந்தேதி ஒரே நாளில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.460-ம், சவரனுக்கு ரூ.3,680-ம் அதிரடியாக சரிந்து, ஒரு சவரன் ரூ.93 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. தொடர்ந்து குறைந்து வந்த தங்கம் விலை நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் அதிகரித்து, ஒரு கிராம் ரூ.11,500-க்கும், ஒரு சவரன் ரூ.92 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது.
அதன்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.400 குறைந்து ஒரு சவரன் ரூ.91,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.50 குறைந்து ஒரு கிராம் ரூ.11,450-க்கு விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் ரூ.170-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் விற்பனையாகி வருகிறது.






